கணினி நிறுவன கோளாறால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இணையதளங்கள்: கனடாவில் பல நிறுவனங்கள் பாதிப்பு
Reading Time: < 1 minuteகணினி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு ஒன்றின் காரணமாக, நேற்று உலகில் ஆயிரக்கணக்கான இணையதளங்களும் டிஜிட்டல் சேவைகளும் பாதிக்கப்பட்டன. கனடாவிலும் பல நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. Akamai என்னும் cloud computing நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைதான் இந்த குளறுபடிகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. ஆனால், இது சைபர் தாக்குதல் அல்ல என Akamai தெரிவித்துள்ளது. நேற்று மதியம் 1 மணியளவில் பிரச்சினையை சரி செய்துவிட்டதாக Akamai நிறுவனம் தெரிவித்திருந்தது.Read More →