Reading Time: < 1 minuteகொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ள முடியும் என கனேடிய மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் மற்றும் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஹோவர்ட் என்ஜூ ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். கனடாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அஸ்ட்ராஸெனெகா, ஃபைசர்- பயோஎன்டெக் அல்லது மொடர்னா கொவிட் -19 தடுப்பூசி அளவுகளை சில சூழ்நிலைகளில் மாறி மாறி இணைக்க முடியும் எனRead More →

Reading Time: 2 minutesகனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடிசிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள விடயத்தில் கனடா தவறிழைத்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். கண்களை மூடிக்கொண்டு இது நடக்கவில்லை என கனடியர்களால் பாசாங்கு செய்ய முடியாது என்றும் ட்ரூடோ கூறினார். அந்த குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களின் சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி விடயத்தில் கனடா தோல்வியடைந்துள்ளதை அனைத்துக் கனேடியர்களும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடிசிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தனது அமைச்சரவை ஆராய்ந்து வருவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார். உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பழங்குடி மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் கனடாவில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்தார்.Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் கீரன் மூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 26ஆம் திகதி, மருத்துவர் டேவிட் வில்லியம்சிடமிருந்து சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் அறிவித்தார். கீரன் மூர், 2011ஆம் ஆண்டு முதல் கிங்ஸ்டன், ஃபிரான்டெனாக், லெனாக்ஸ் மற்றும் ஆடிங்டன் ஆகியவற்றின் சுகாதார மருத்துவ அதிகாரியாக இருந்து வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முந்தைய லிபரல் அரசாங்கத்தின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 611பேர் பாதிக்கப்பட்டதோடு 35பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 81ஆயிரத்து 582பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 547பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 33ஆயிரத்து 757பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 122பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →