Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 12 இலட்சத்து 27 ஆயிரத்து 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 07 ஆயிரத்து 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 42 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 24 ஆயிரத்து 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணம் – ரொரண்டோ, சன்னிபிரூக் மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு உதவும் பணிகளில் கனேடிய இராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர். மருத்துவமனையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் கனேடியப் படையினரின் உதவிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கூட்டுப் படையணியில் அங்கம் வகிக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய 34 பேர் முதல்கட்டமாக மருத்துவமனை பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு அருமையான பணி. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் எங்கள் அணியினர் உற்சாகத்துடன்Read More →

Reading Time: 2 minutesஒன்ராறியோ மாகாண அரசு கோவிட்19 தொற்று நோயை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அத்துடன், நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களைப் பாதுகாக்க விரிவான திட்டங்களை எதனையும் கொண்டிருக்கவில்லை என சுயாதீன ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான புறக்கணிப்புக்களால் நீண்டகால பராமரிப்பு மையங்களில் வசிப்போர் மற்றும் பணியாளர்கள் எளிதாக தொற்று நோயால் பாதிக்கப்படக்கூடிய சூழல் அங்கு உருவானதாகவும் சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஒன்ராறியோவில் தொற்று நோயின் முதலாவது, இரண்டாவது அலைகளின்போதுRead More →