Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 11 இலட்சத்து 39 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 07 ஆயிரத்து 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 46 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 23 ஆயிரத்து 713 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெரும்பாலான பகுதிகளில் றோஜர்ஸ் (Rogers) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தந்தியில்லா அலைபேசி மற்றும் இணைய சேவைகள் நேற்று திங்கட்கிழமை செயலிழந்த நிலையில் இந்த சேவைகள் பெரும்பாலும் நேற்று மாலை வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று பல மணிநேரங்கள் நீடித்த சிக்கலுக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. எங்கள் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இப்போது சேவைகளை மீண்டும் பெறக்கூடியதாக உள்ளது என தொலைத் தொடர்பு நிறுவனமான றோஜர்ஸ் தெரிவித்துள்ளது. சிறிய எண்ணிக்கையான வாடிக்கையாளர்கள் தொடந்தும்Read More →

Reading Time: < 1 minuteதீவிர தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கனேடிய மத்திய அரசாங்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2021-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை கனேடிய துணை பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் நேற்று திங்கட்கிழமை சமர்ப்பித்தார். கோவிட் தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளுதல், தொற்றின் பின்னர் பொருளாதார மீள் எழுச்சிக்கு உதவுதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாகக் கொண்டு இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 101.4 பில்லியன் டொலர் புதிய செலவீனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என மாகாண முதல்வர் ஜோன் ஹொர்கன் அறிவித்துள்ளார். ஹொர்கன் வெள்ளிக்கிழமை தொடங்கி மக்கள் சுகாதார அதிகாரத்தை விட்டு வெளியேறும் திறனைக் கட்டுப்படுத்தப் புதிய உத்தரவுகள் இருக்கும் என்று கூறினார். வீதியோர நிறுத்தங்களைப் போலல்லாமல், சீரற்ற சோதனை மூலம் இது நடத்தப்படும். இந்த சீரற்ற தணிக்கைகள் ஒரு சில பயணிகளுக்கு மட்டுமல்ல, மீண்டும் அனைத்து பயணிகளுக்கும் இருக்கும். மீண்டும் அவை சீரற்றதாக இருக்கும். நியாயமானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பத்தாயிரத்து 275பேர் பாதிக்கப்பட்டதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 31ஆயிரத்து 773பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 667பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 88ஆயிரத்து 327பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,167பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மருந்தகம் மற்றும் முதன்மை பராமரிப்பு அமைப்புகளில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து கூறுகையில், ‘மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு என்ஏசிஐ ஆலோசனை வழங்குகிறது. பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் படி அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அஸ்ட்ராஸெனெகாவுக்கான பயன்பாட்டை சரிசெய்ய முடியும்.ஹெல்த் கனடா 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்தRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தின் தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க முதல்வர் டக் ஃபோர்ட் வெளிநாட்டு உதவியை நாடியுள்ளார். ஒன்றாரியோவிற்கு கொவிட்-19 தடுப்பூசி அதிக அளவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஃபோர்ட் உலகெங்கிலும் உள்ள தூதரகங்களை அணுகத் தொடங்கியுள்ளதாக மாகாண முதல்வரின் செய்தித் தொடர்பாளர் இவானா யெலிச் உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அஸ்ட்ராஸெனெகாவின் வயது வரம்பைக் குறைப்பது குறித்த கூட்டாட்சி முடிவுக்காக நாம் காத்திருக்கும்போது, மற்றும் மொடர்னா ஏற்றுமதிகளில் சமீபத்திய வெட்டுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 591பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 21ஆயிரத்து 498பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 623பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 87ஆயிரத்து 925பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,167பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா தொற்றினால் உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டிவிட்டதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதிய நோயாளிகள் மற்றும் இறப்பு விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் எச்சரித்த மறுநாளே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொள்ளும் இந்தியாவில் நேற்றுமட்டும் சுமார் 230,000 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி தொற்று பரவல் ஆரம்பித்ததில் இருந்துRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய்க்கு எதிராக போராடுவதற்கு அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்பபட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பில் உள்ள சிக்கலைச் சமாளிக்க உதவ, 620 சுகாதாரப் பணியாளர்களை அனுப்புமாறு ஒன்றாரியோவிலிருந்து வந்த கடிதத்திற்கு பதிலளித்த அல்பர்ட்டா, தங்களது சொந்த மாகாணத்திற்கு இப்போது முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக ஜேசன் கென்னியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த நேரத்தில் எங்கள் சுகாதாரப் பணியாளர்களை மாகாணத்திற்கு வெளியேRead More →