Reading Time: 2 minutesஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்த அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தினை பாராட்டுவதாக  தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்கிறோம் எனத் தெரிவித்துள்ளது. 1915ம் ஆண்டு இளவேனிற்காலம் தொடங்கி 1916 இலையுதிர் காலம் வரையிலும் ஆர்மேனியர்கள் மீது படுகொலைகள், புலப்பெயர்ச்சி, பட்டினி, மோசமான நடத்துமுறை ஆகிய வழிகளில் 1.5 மில்லியன் ஆர்மேனியர்கள் மூர்க்கமான விதத்தில் நேரடியாகவே அழித்தொழிக்கப்பட்டார்கள். மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனதுRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா மரணங்கள் நேற்று வியாழக்கிழமை 8 ஆயிரத்தைக் கடந்து பதிவாயின. நேற்று மேலும் 41 கொரோனா மரணங்கள் மாகாணத்தில் பதிவான நிலையில் மொத்த கொரோனா மரணங்கள் 8,029 ஆக அதிகரித்துள்ளன. அத்துடன், 3,871 புதிய கோவிட்-19 தொற்று நோயாளர்கள் மாகாணத்தில் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர். நேற்று வரையான கடந்த 7 நாட்களில் ஒன்ராறியோவில் தினசரி சராசரி தொற்று நோயாளர் தொகை 3,810 ஆக பதிவாகியுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னர்Read More →

Reading Time: < 1 minuteரொரண்டோவில் வசித்துவரும் 16 வயதான தரணிதா ஹரிதரன் என்ற இளம் பெண் காணாமல் போயுள்ள நிலையில் அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அறியத்தருமாறு ரொரண்டோ பொலிஸார் கோரியுள்ளனர். தரணிதா ஹரிதரன் கடைசியாக நேற்று 29 வியாழக்கிழமை கனேடிய நேரப்படி மதியம் 1 மணிக்கு, டப்ஸ்கொட் வீதி மற்றும் மெக்லெவின் அவென்யூ ( Tapscott Road and McLevin Avenue area) பகுதியில் காணப்பட்டார். 5.5 செ.மீ. உயரமுடைய அவா், மெல்லியRead More →

Reading Time: < 1 minuteஜோன்சன் & ஜோன்சன் ஒற்றை கோவிட்19 தடுப்பூசியின் முதல் தொகுதி கனடா வந்துள்ளது. 3 இலட்சம் தடுப்பூசிகள் நேற்று நாட்டுக்கு எடுத்துவரப்பட்டுள்ளதை கனேடிய மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்களை மத்திய அரசாங்கம் வெளியிடவில்லை. ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி உற்பத்தி தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் மிகக் குறைந்த அளவு தடுப்பூசிகளையே இந்நிறுவனம் வழங்கியுள்ளது. ஜோன்சன் & ஜோன்சன்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பேரிழப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தியாவிற்கு, 10 மில்லியன் டொலர்களை கனடா வழங்கியுள்ளது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘தற்போது இந்திய மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். அம்புலன்ஸ் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை வாங்குவதற்கு 10 மில்லியன் டொலர்களை இந்திய செஞ்சிலுவை அமைப்புக்கு வழங்கியுள்ளோம். மேலும், கூடுதல் மருத்துவ உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களால் முடிந்த எந்த வகையிலும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 12இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 12இலட்சத்து இரண்டாயிரத்து 737பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 24ஆயிரத்து 117பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 748பேர் பாதிக்கப்பட்டதோடு 52பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 83ஆயிரத்து 354பேர் மருத்துவமனைகளில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 11 இலட்சத்து 94 ஆயிரத்து 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 07 ஆயிரத்து 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 41 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 24 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteவன்கூவரின் மேற்குப் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த 15 வயது சிறுவனின் கொலை விவகாரம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மதியம் 1:30 மணியளவில் மேற்கு 12ஆவது நிழற்வீதி மற்றும் அல்மா வீதியில் உள்ள பாதாம் பூங்காவில் இரண்டு குழுக்களின் இளைஞர்களிடையே ஏற்பட்ட சண்டையின் போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டது. இதன்போது உயிராபத்தான காயங்களுடன் இச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் நேற்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 24ஆயிரத்து 24பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 87ஆயிரத்து 918பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 931பேர் பாதிக்கப்பட்டதோடு 59பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ மற்றும் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்பப்போவதாக கனடாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நேற்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம், உதவி கோரியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒன்ராறியோவின் கோரிக்கைக்கு ஒட்டாவா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இராணுவம் மாகாணத்தில் உதவுவதுடன் தளவாட மற்றும் நிர்வாக ஆதரவையும் வழங்கும் எனவும் கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.Read More →