கனடா – அமெரிக்காவிற்கிடையிலான பயணத் தடை நீடிப்பு!
Reading Time: < 1 minuteகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு இடையிலான அத்தியாவசியமற்ற பயணத் தடை நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொற்றுநோய் காரணமாக மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 11-வது தடவையாகவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டு முழுதாக ஒரு வருடம் ஆகவுள்ளது.Read More →