Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 094பேர் பாதிக்கப்பட்டதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 58ஆயிரத்து 220பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 865பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 338பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 588பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகRead More →

Reading Time: < 1 minuteடொரோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பல சர்வதேச பயணிகள் மூன்று நாள் விடுதியில் தனிமைப்படுத்தக் கோரும் புதிய விதிக்கு இணங்க மறுத்துவருவதாக இன்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வாரம் நடைமுறைக்கு வந்த COVID தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற மறுத்தவர்களுக்கு Ontarioவின் விதிமுறைகளின் கீழ் 880 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடா பாதுகாப்புப் படை தலைமைப் பதவியில் இருந்து அட்மிரல் ஆர்ட் மெக்டொனால்ட் தானாகவே முன்வந்து விலகியுள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படை தலைமைப் பதவியில் இருந்த அட்மிரல் ஆர்ட் மெக்டொனால்டுக்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணை ஒன்று முன்னெடுக்கபடும் நிலையிலேயே அந்தப் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து கனேடிய படைகளின் தேசிய புலனாய்வு சேவை விசாரணை செய்து வருவதாக சஜ்ஜன்Read More →

Reading Time: < 1 minuteநகர தலைமையிலான மற்றும் நகர அனுமதிக்கப்பட்ட அனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்வதாக ரொறொன்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா மற்றும் முக்கிய நிகழ்வு அமைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நகரங்கள் நிர்வகிக்கும் வெளிப்புற தளங்களில் அல்லது வீதிகள், பூங்காக்கள் மற்றும் குடிமைச் சதுக்கங்கள் போன்ற பிற பொது இடங்களில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்து இரண்டாயிரத்து 926பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 55ஆயிரத்து 126பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 21ஆயிரத்து 807பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால்,Read More →

Reading Time: < 1 minuteநமக்கு இன்னும் சில தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தேவை என மருத்துவர் தெரசா டாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘செப்டம்பர் மாதத்திற்குள் வலுவான கட்டுப்பாடுகளின் தேவையை குறைக்க முடியும். தடுப்பூசிகள் ஒரு முறை நாம் அறிந்த வாழ்க்கைக்கு திரும்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனென்றால், அதிகமான மக்கள் தடுப்பூசி போடும்போது, மீண்டும் எழுச்சி பெறுவது குறைவு. இப்போது மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் தடுப்பூசிகளிலிருந்து சில பெரிய தாக்கங்களைRead More →

Reading Time: < 1 minuteஜோன்சன் அண்ட் ஜோன்சன் (Johnson & Johnson) மருந்து நிறுவனம் தாயரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையமான FDA அங்கீகாரம் அளித்துள்ளது. 44 ஆயிரம் பேருக்கு பல்வேறு நாடுகளில் இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டதில் எந்தவிதப் பின்விளைவுகளும் ஏற்படாததால் மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது தடுப்பூசியாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தயாரிப்பு மருந்தை அவசர காலRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கிடையில், காணொளி காட்சி வாயிலாக முக்கிய பேச்சுவார்தையொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, கொவிட் -19, காலநிலை மாற்றம், சீனாவுடனான போட்டி, நேட்டோ மற்றும் தேசியப் பாதுகாப்பு- ஆர்க்டிக் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாவதித்தனர். இருவருக்கும் இடையில் இரண்டு மணி நேர பேச்சுவார்தையின் பின்னர், இருவரும் இருநாட்டு உறவின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினர்.இதன்போது கருத்துதெரிவித்தRead More →