ரொரண்டோவில் பிரேசில் திரிபு கொரோனா வைரஸ் கண்டறிவு!
Reading Time: < 1 minuteபிரேசிலில் பரவிவரும் கொரோனாவின் புதிய திரிபு வைரஸ் கனடாவில் முதன்முறையான ரொரண்டோ நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரொரண்டோ பொது சுகாதாரத் துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரேசிலில் இருந்து ரொரண்டோ வந்த ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் பிரேசிலில் பரவும் பி.-1 திரிபு (P.1 variant) தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் தற்போது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் ரொரண்டோ பொது சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.Read More →