Reading Time: < 1 minuteஇலங்கை விவகாரம் தொடர்பாக, ஐ.நாவில் மீண்டும் கனடா தலைமை தாங்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின், கனடாவுக்கான இயக்குநர் பரீடா டெய்வ் (Farida Deif) தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் போருக்குப் பின்னர் நல்லிணக்கத்தையும், நீதியையும் ஏற்படுத்துவதற்கான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்களிப்பு செய்த நாடுகளில் ஒன்றாக கனடா காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் மனித உரிமை நிலவரம் மீண்டும் மோசமடைகின்றது எனவும், இராஜதந்திர நடவடிக்கைகளைRead More →

Reading Time: < 1 minuteசீனாவின் வுஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்ற கருத்தை அங்கு ஆய்வு செய்துவரும் உலக சுகாதார அமைப்பு வல்லுநர் குழு நிராகரித்துள்ளது. வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியமைக்கான வாய்ப்பு மிக-மிகக் குறைவு என சீனா – வுஹான் நகரில் ஆய்வு செய்துவரும் உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் பென் எம்பரேக் கூறினார். எனினும் வைரஸ் பரவலின் மூலத்தைக் கண்டறியRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 3,860பேர் பாதிக்கப்பட்டதோடு 68பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து எட்டாயிரத்து 120பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 20ஆயிரத்து 835பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40ஆயிரத்து 175பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 713பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் 80 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்குஈ அடுத்த மாதம் முதல் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகள் கிடைக்கும் என பொது சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும், மாகாணத்தின் தடுப்பூசி வழங்கல் அதிகரிக்கும் எனவும் தகுதி வாய்ந்தவர்கள் தடுப்பூசி எங்கு கிடைக்கும் என்று விரைவில் அறிந்து கொள்வார்கள் என்று அவர் மேலும் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்திலும்Read More →

Reading Time: < 1 minuteவடமேற்கு ஒன்றாரியோவின் சில பகுதிகளில் அடுத்த வாரத்தின் ஒவ்வொரு இரவிலும் காற்று குளிர்ச்சியுடன் -40 போல உணர முடியும் என்று கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் கூறுகிறது. உடலை மூடிமறைக்கவும். வெளிப்படும் தோலில், குறிப்பாக காற்றின் குளிர்ச்சியுடன், உறைபனி கடித்தல் சில நிமிடங்களில் உருவாகலாம் என்று தீவிரக் குளிர் எச்சரிக்கை கூறுகிறது. விரல்கள் மற்றும் கால்விரல்களில் வண்ண மாற்றங்கள், வலி, உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது வீக்கம் ஆகியவை ஏற்படலாம். அப்படிRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணத்தின் வடக்கேயுள்ள புறநகரான பரி (Barrie) யில் இளைஞர் ஒருவர் தனது ‘ஸ்கேட் போர்ட்டில்’ சிவப்பு போக்குவரத்து சமிக்ஞை விளக்கு எரியும்போது பாதையைக் கடந்ததால் அவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவமொன்று வலைத்தளங்களில் பரவலாக்கப்பட்டு வருகிறது. கடந்த வியாழன் (Feb 4), மாலை 4 மணியளவில் Barrie நகரின் டன்லப் வீதியில் நடைபெற்ற இச் சம்பவத்தின்போது 20 வயதுடைய இளைஞரைப் பொலிசார் கைதுசெய்யும் காட்சியைப் பாதசாரி ஒருவர் காணொளியாகப் பதிவுசெய்துRead More →

Reading Time: < 1 minuteபொத்துவில் முதல் பொலிகண்டி (P2P) அணிவகுப்புக்கு ஆதரவாக கனடாவின் டொரொண்டோ மற்றும் மொன்ரியலில் இடம்பெற்ற வாகன ஆர்ப்பாட்ட பேரணிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பங்கேற்றன. எஜக்ஸ், மார்க்கம்/ஸ்கார்பாரோ, பிராம்ப்டன், மற்றும் மிசிசாகா ஆகிய நகரங்களில் இருந்து ஒவ்வொரு நகரத்திலிருந்தும் வாகனங்கள், மதியம் 12 மணிக்கு எதிர்ப்பு பேரணிகளைத் தொடங்கி, பிற்பகல் 3.30 மணிக்கு குயின்ஸ் பூங்காவில் இணைந்தன. 24 மணி நேர குறுகிய அறிவிப்புடன், டொராண்டோ பகுதி மற்றும் மொன்ரியல் பகுதியில்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியப் பிரதமர் மோடி மற்றும் கனடாவில் பணியாற்றும் இந்திய துாதரக அதிகாரிகளுக்கும் கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கனடாவில உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். இந்திய மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் விவசாய சட்டங்களுக்குRead More →