Reading Time: < 1 minute2018ஆம் ஆண்டில் ஓபியாய்டுகளின் விளைவாக கனடாவில் ஒரு நாளைக்கு சுமார் 13பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து தொடர்பான காயங்களை விட ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் இரு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், ஓபியாய்டுகளின் விளைவாக 2018ஆம் ஆண்டில் கனடாவில் 4,614பேர் உயிரிழந்துள்ளனர். கனேடிய தொண்டு நிறுவனமான பாராசூட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteதொற்றுநோய்களின் போது கனேடியர்கள் குறைந்த மன அழுத்தத்தில் உள்ளதாக, ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அங்கஸ் ரீட் இன்ஸ்டிடியூட்டின் புதிய கருத்து கணிப்பின்படி, கனேடியர்கள் பொதுவாக அமெரிக்கர்களை விட கொவிட்-19 ஆல் குறைந்த மன அழுத்தமும், பொருளாதாரச் சுமையும் கொண்டவர்கள் என கூறுகிறது. கண்டுபிடிப்புகளின்படி, தொற்றுநோயால் ஏற்படும் இடைவிடாத நிதி மற்றும் சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் போது அமெரிக்கர்கள் அதிகம் போராடுகிறார்கள். வாக்கெடுப்பின் புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்கர்கள் கனேடியர்களை விட பெரிய அழுத்தத்தைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இரண்டு இலட்சத்து 52பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து ஆயிரத்து 208பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 422பேர் பாதிக்கப்பட்டதோடு, 29பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 003பேர் மருத்துவமனைகளில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கொவிட்-19 தடமறிதல் பயன்பாட்டிலிருந்து அறிவிப்பைப் பெற்ற பிறகு ஃப்ரீலேண்ட் இந்த முடிவினை எடுத்துள்ளார். சோதனையின் முடிவுகளுக்காக நான் காத்திருக்கும்போது நான் வீட்டில் தனிமைப்படுத்துகிறேன் என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். எனது முடிவுகள் இன்று காலை எதிர்மறையாக வந்தன. மீண்டும், எங்கள் மகத்தான சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களுக்கு எனது நன்றி. உங்களிடம் ஏற்கனவே கொவிட்-19 தடமறிதல் இல்லையென்றால், அதைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பொது ஊழியர்கள் மத அடையாளங்களுடனான உடைகள் அணிவதைத் தடைசெய்யும் சட்டம்-21 இற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று கியூபெக் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த சட்டம், கனேடிய அரசியலமைப்பை மீறுகின்றது என உரிமைக் குழுக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் வழக்கு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சட்டமானது ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற பொது ஊழியர்கள் பணியின்போது மதச் சின்னங்களை அணிவதைத் தடைசெய்கிறது. கனேடிய மாகாணமான கியூபெக்கில் நீண்டகாலமாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 330பேர் பாதிக்கப்பட்டதோடு, 43பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 36ஆயிரத்து 841பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக பத்து ஆயிரத்து 179பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28ஆயிரத்து 933பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 97ஆயிரத்து 729பேர்Read More →

Reading Time: < 1 minuteசில கனடா- அமெரிக்க எல்லை நகரங்களில் வசிப்பவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த விலக்கு காம்போபெல்லோ தீவு, நியூ பிரன்சுவிக் மற்றும் ஸ்டீவர்ட், பிரிட்டிஷ் கொலம்பியா, வடமேற்கு ஆங்கிள், மினசோட்டா மற்றும் ஹைடர், அலாஸ்காவில் வசிப்பவர்களுக்கு பொருந்தும். ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அந்த நான்கு எல்லை நகரங்களில் வசிப்பவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறுவார்கள். நெருங்கிய கனேடிய அல்லது அமெரிக்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு இந்த தாக்குதலை அடுத்து பொது மக்களை வீட்டிலேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க பழைய கியூபெக்கில் பாராளுமன்றை சுற்றியுள்ள பகுதியிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 20 வயதுடைய சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கத்திக் குத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்Read More →