Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 395பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 561ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 966பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 489பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து மூவாயிரத்து 106பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteபோதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி செய்ததற்காக கனேடியருக்கு மரண தண்டனை விதித்ததாக சீன நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸோவை (Meng Wanzhou) கனடா-வன்கூவர் பொலிஸார், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி கைது செய்தமைக்கு பிறகு பதிவான நான்காவது மரண தண்டனை உத்தரவாகவும், போதைப்பொருள் விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் இரண்டாவது கனேடியருக்கு மரண தண்டனை சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கொல்ல திட்டமிட்டதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சாத் அல் ஜாப்ரி என்பவரை கொல்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘என்னை கொள்வதற்காக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கனடாவிற்கு ஒரு கொலை கும்பலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 395பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 187ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 962பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 437பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 788பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteபெயிரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய அரசாங்கம் 5 மில்லியன் டொலர் வரை நிவாரணம் அளிக்கிறது. வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவச் சேவைகள், தங்குமிடம் மற்றும் உணவு வழங்க இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று கனேடிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனடா தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் பெயிரூட்டில் உள்ள மனிதாபிமான அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளது. கனடா இந்த கொடூரமானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, நாளொன்றுக்கான குறைந்த கொரோனா வைரஸ் (கொவிட்-19) உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 147பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 2பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 24ஆம் திகதிக்கு (2பேர்) பிறகு கனடாவில் பதிவான குறைந்தபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteஐ.நா. பாதுகாப்புக் குழுவில் தற்காலிக ஆசனத்திற்கான முயற்சியை இழந்த போதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க கனடா தீர்மானித்துள்ளது. இதன்படி ஆபிரிக்காவில் ஐ.நா. நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சி.சி -130 ஹெர்குலஸ் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார். பிராந்தியத்தில் ஐ.நா.வை ஆதரிப்பதற்காக முக்கியமான பொருட்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு செல்வதில் கனேடிய ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைதி காக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிற பகுதிகளிலுள்ளவர்களை நியூ பிரன்சுவிக்குள் அனுமதிப்பது தொடர்பாக, எச்சரிக்கையாக இருப்பதாக மாகாண முதல்வர் பிளேன் ஹிக்ஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே கியூபெக்கில் உள்ள இரண்டு எல்லை நகராட்சிகளில் வசிப்பவர்கள் மாகாணத்திற்கு பயணிக்க அனுமதிக்கப்படுவதாக ஹிக்ஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘செப்டம்பர் 8ஆம் திகதி நியூ பிரன்சுவிக் மாணவர்கள் மீண்டும் வகுப்புக்குச் செல்வதுடன் மீண்டும் திறப்பது குறித்து நான் கவலைப்படுகின்றேன். மீண்டும் மக்களை அனுமதிப்பதற்கு சுற்றுலாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதேRead More →

Reading Time: < 1 minuteகிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் இல்லாத அளவு, ஒட்டாவாவில் கடந்த ஜூலை மாதத்தில் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒட்டாவா மாதத்தின் பாதிக்கும் மேலாக கடுமையான வெப்ப அலை தென்பட்டுள்ளது. ஜூலை மாதம் நான்கு வெப்ப எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன. இவற்றில் ஒன்று நேராக ஐந்து நாட்கள் நீடித்தது. பதினெட்டு நாட்கள் 30 பாகை செல்சியஸ்க்கு மேல் உயர்ந்ததைக் கண்டன. இதில் மூன்று நாட்கள் உயர் வெப்பநிலை பதிவுகளை முறியடித்தன. அங்கு வெப்பநிலை 20Read More →

Reading Time: < 1 minuteகடந்த 24 மணி நேரத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கியூபெக் பொது சுகாதார அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை அறிவித்தனர், இதே காலகட்டத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் ஜூலை 24 க்கு பின்னர் நான்கு மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாகாணத்தில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 59,458 ஆகவும் 5,678 பேர் இறந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 513பேர் பாதிப்படைந்ததோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 16ஆயிரத்து 312ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 935பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 150பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து ஆயிரத்து 227பேர் பூரணRead More →

Reading Time: < 1 minuteவீ அறக்கட்டளையை சுற்றியுள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், அறக்கட்டளையுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. கல்வி அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் லெஸ், தொண்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளால் அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்று கூறினார். இதுகுறித்து லெக்ஸின் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா ஆடமோ கூறுகையில், ‘இது வரி செலுத்துவோர் பணம். இந்த மாகாணத்தில் கடின உழைப்பாளிகள் தங்கள் பணம் மதிப்பை வழங்குகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளத் தகுதியானவர்கள், இந்தRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க நிலப்பரப்பில் இருந்து அலாஸ்காவுக்குச் செல்ல எத்தனிக்கும் எவருக்கும் புதிய கட்டுப்பாடுகளை கனடா எல்லை சேவைகள் நிறுவனம் விதித்துள்ளது. கனடா-அமெரிக்க நில எல்லை மார்ச் 21ஆம் திகதி முதல் அத்தியாவசியமற்ற போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது, ஆனால் அமெரிக்கர்கள் கனடா வழியாக வாகனம் ஓட்டினால் அலாஸ்காவுக்கு வேலை அல்லது வீடு திரும்புவது போன்ற ஒரு அத்தியாவசிய நோக்கத்திற்காக இன்னும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், இதனை சில அமெரிக்கர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். அமெரிக்கர்கள் எல்லை அதிகாரிகளிடம்Read More →