Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 329பேர் பாதிப்படைந்ததோடு, 12பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 15ஆயிரத்து 799ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 929பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 8பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 862பேர் பூரண குணமடைந்துRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணம் முழுவதுமுள்ள பாடசாலைகளை மீண்டும் செப்டம்பர் மாதம் திறக்கவுள்ளதாக மாகாண அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பாடசாலை மாணவர்களும் பல உயர்நிலைப் பாடசாலை மாணவர்களும் செப்டம்பர் மாதத்தில் முழுநேர வகுப்பறைக்குத் திரும்புவார்கள். மழலையர் பாடசாலையில் 8ஆம் வகுப்பு முதல் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் ஒன்றாரியோ முழுவதும் வாரத்திற்கு ஐந்து நாட்கள் ஒரு முழு நாள் பாடசாலைக்குத் திரும்புவார்கள். வகுப்பு அளவுகளில் எந்த மாற்றமும் இல்லாமல், இடைவேளையும் மதிய உணவும் இதில்Read More →

Reading Time: < 1 minuteஎட்மண்டனில் உள்ள குட் சமாரியன் சவுத்கேட் பராமரிப்பு மையத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், குறித்த பராமரிப்பு மையத்தில் தற்போது 70 பேர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அல்பர்ட்டாவில் நேற்று (வியாழக்கிழமை) மேலும் ஐந்து கொவிட்-19 இறப்புகள் மற்றும் 113 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் உயிரிழப்பின் எண்ணிக்கை 195ஆக உயர்ந்துள்ளது. செயலில் உள்ள பாதிப்புகள் 1,408ஆக உள்ளன. அல்பர்ட்டா சுகாதாரச் சேவை, கடந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பது ஆயிரத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் எட்டு ஆயிரத்து 917பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால் 476பேர் பாதிப்படைந்ததோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 15ஆயிரத்து 470ஆகRead More →

Reading Time: < 1 minuteஅனைத்து பொது உட்புற இடங்களிலும் முகக்கவசங்களை கட்டாயமாக்க எட்மண்டன் நகர சபை தீர்மானித்துள்ளது. இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 10-3 என்ற கணக்கில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் இந்த விதி நடைமுறைக்கு வருகின்றது. இதேவேளை இந்த விதியை மீறுபவர்களுக்கு 100 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம். புதிதாக இயற்றப்பட்ட துணைச்சட்ட விதி நகரத்திற்கு சொந்தமான வசதிகளுக்கு மட்டுமல்ல,Read More →

Reading Time: < 1 minuteசஸ்காட்செவனைச் சேர்ந்த சில இளைஞர் ஹொக்கி அணிகள், இந்த மாத தொடக்கத்தில் மனிடோபாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டதற்காக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. சஸ்காட்செவனில் உள்ள கொவிட்-19 விதிகள் மாகாணத்திற்கு வெளியே பயணங்களுக்கு போட்டிகளை அனுமதிக்காது. ஆனால், சஸ்காட்செவனில் இருந்து சில அணிகள் வட அமெரிக்க ஹொக்கி கிளாசிக் தொடரில் பங்கேற்க, வின்னிபெக் நகருக்கு பயணம் செய்தன. இதனால் கொவிட்-19 விதிகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், மாகாணத்தின் வீரர்களைக் கொண்டRead More →

Reading Time: < 1 minuteஉலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை கையாள்வதில் சிறப்பாக செயற்பட்ட கனடாவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து கூறுகையில், “கொவிட்-19 நம் உலகத்தை மாற்றியுள்ளது. இது மக்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களை ஒன்றிணைத்து அவர்களை ஒதுக்கித் தள்ளியுள்ளது. நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மனிதர்களுக்கு என்ன திறன் உள்ளது என்பதை இதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒரு இலட்சத்து 134பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால் 397பேர் பாதிப்படைந்ததோடு, 11பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 994ஆகRead More →