Reading Time: < 1 minuteநிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டம், கனடாவிலும் இடம்பெற்றுள்ளது. மொன்றியலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இப்போராட்டம், மோதலுடன் முடிவுக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொன்றியல் நகரத்தின் வழியாக பதுங்கியிருந்த போராட்டக்காரர்கள் இரவு வேளையிலும் அதே இடத்தில் இருந்ததாலேயே போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் வெடித்தது. மொன்றியல் பொலிஸார் கூட்டத்தை சட்டவிரோதமாக அறிவித்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் அங்கு இருந்தால் மிளகு தெளிப்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நாளொன்றுக்கு உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 757பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 222பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் கனடாவில் பதிவான அதிகூடிய உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். இதற்கமைய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,947ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,295ஆக உளளது. மேலும், 34,773பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு,Read More →

Reading Time: < 1 minuteவடக்கு சஸ்காட்செவன் ஆற்றில் நீரின் மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, அதிகாரிகள் மீண்டும் வடக்கு சஸ்காட்செவன் ஆற்றின் கரையில் இருந்து விலகி இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். நீர்மட்டம் இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருப்பதாகவும், நீரோட்ட வீதம் வழக்கமான வீதத்தை விட இருமடங்காக இருப்பதால் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் எட்மண்டன் தீயணைப்பு மீட்பு சேவைகள் கூறியது கடந்த வாரம் இதே போன்றதொரு எச்சரிக்கையொன்று தீயணைப்பு மீட்பு சேவைகளால் விடுக்கப்பட்டது.Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவின் சிம்கோவிற்கு அருகிலுள்ள ஸ்காட்லின் தொழிற்சாலையில் பணிபுரியும் பருவகால தொழிலாளர்களிடையே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாத இறுதியில் மெக்ஸிகோவிலிருந்து அழைத்துவந்த 207 தொழிலாளர்களில் மூன்று பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஸ்காட் பிடில் தெரிவித்துள்ளார். இவர்கள் 14 நாட்கள் சுயத் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தபோதும், தற்போது 25 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குத் தொற்று நேர்மறைRead More →