Reading Time: < 1 minuteஇனவெறி மற்றும் மிருகத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யோசனையொன்றை முன்வைத்துள்ளார். பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளில் கெமராக்களை பொருத்த, மாகாண முதல்வர்களை வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடனான தொடர்புகளை கெமராக்கள் ஆவணப்படுத்துகின்றன. கனடாவில் பொலிஸார் இனமயமாக்கப்பட்ட மக்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள் என்ற புகார்களைத் தீர்ப்பதற்கான ஒப்பீட்டளவில் எளிய வழி அவை’ என கூறினார். நிராயுதபாணியான கறுப்பினRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 27பேர் உயிரிழந்ததோடு, 642பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்கு (23பேர்) பிறகு, தற்போது தான் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 95,699பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 7800பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 33,666பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வூட்ரிட்ஜ் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நீண்டகால பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனேடிய ஆயுதப்படைகளின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், அடுத்த நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மேலும் பல செய்திகளைப் பகிர்ந்து கொள்வோம்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மருத்துவமனை ஆதரவைப் பெற்ற போதிலும், வூட்ரிட்ஜ் விஸ்டா கேர் சமூகத்தால் கொவிட்-19இன் பரவலைக் கட்டுப்படுத்தRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தொடந்து நீடிப்பதால், ஒன்ராறியோ அரசாங்கம் அனைத்து அவசர உத்தரவுகளையும் நீடித்துள்ளது. ஐந்துக்கும் மேற்பட்டவர்களின் சமூக ஒன்று கூடுவதற்கான தடை உள்ளிட்ட அவசர உத்தரவுகள் ஜூன் 9ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளன. இந்தநிலையில், ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களின் சமூக ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்தும் சட்டமும் அடங்களாக அனைத்து அவசர உத்தரவுகளையும் ஜூன் 19ஆம் திகதி வரை நீடிப்பதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. வாங்கிச் செல்லும் சேவைக்கு மட்டுமேRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 66பேர் உயிரிழந்ததோடு, 609பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,703ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,335ஆக அதிகரித்துள்ளது. மேலும், 34,064பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 52,568பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,738பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteவிமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால், பயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் காரணமாக, விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் பணத்தை திரும்பக் கோரினர். இதன் பின்னணியில் தனது பணத்தை திரும்பத் தரும் கொள்கையை மாற்றி, பயணிகளின் பணத்தை திரும்ப கொடுப்பதற்கு வெஸ்ட்ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கொவிட்-19 நெருக்கடி காரணமாக விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் நடந்த இனவெறி எதிர்ப்பு பேரணியில் கலந்துக் கொண்டார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த பேரணியில், எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென இணைந்துக்கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு 9 நிமிடங்கள் மண்டியிட்டு மௌன அஞ்சலி செலுத்தினார். மேலும், ட்ரூடோவுடன்; சோமாலிய வம்சாவளி சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் அகமது ஹூசென் அவரது குடும்ப உறுப்பினர்களும்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பொருளாதாரத்தின் பாதுகாப்பான மறுதொடக்கத்திற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று துணைப்பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் உதவுவதற்காக ஒதுக்கப்பட்ட 14 பில்லியன் டொலர்களுக்கான அரசாங்கத்தின் திட்டங்களைப் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் உண்மையிலேயே அடிக்கோடிட்டுக் காட்ட விரும்பும் மற்றொரு விடயம் என்னவென்றால், இப்போது பேசுவது பாதுகாப்பான மறுதொடக்கம். எனவே இது ஒரு நீண்ட கால திட்டம்Read More →

Reading Time: < 1 minuteஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர்த்து, 14 கைதிகள் புதன்கிழமை காலை ஒட்டாவா-கார்லேடன் தடுப்பு மையத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். கைதிகள் முன்வைத்திருந்த கோரிக்கைகள், நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததாக சொலிசிட்டர் ஜெனரல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது 14 கைதிகளும் அதிகபட்ச பாதுகாப்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 139பேர் உயிரிழந்ததோடு, 641பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,637ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,726ஆக அதிகரித்துள்ளது. மேலும், 34,350பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 51,739பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,727பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கும் உதவித் தொகை, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கு 500 டொலர் வரை ஒரு முறை செலுத்துதல் தொகைக்காக கூட்டாட்சி அரசாங்கம், 2.5 பில்லியன் டொலர்கள் நிதியை ஒதுக்கியுள்ளது. முதியோர் பாதுகாப்பு நலனுக்காக தகுதி பெற்றவர்கள் 300 டொலர் வரிவிலக்கு செலுத்த தகுதியுடையவர்கள்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 103பேர் உயிரிழந்ததோடு, 675பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,498ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,085ஆக அதிகரித்துள்ளது. மேலும், 34,539பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 51,048பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,721பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஅதிகமான மக்கள் தற்போது மிதிவண்டிகளை பயன்படுத்தும் நிலையில், ரெட் டீர் பொலிஸார் அவர்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். அதிகமான மக்கள் உடற்பயிற்சி செய்ய அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக நேரத்தைச் செலவிட முயல்வதால் வீதிகளில் அதிகமான மிதிவண்டி ஓட்டுநர்கள் உள்ளனர். இந்தநிலையில் மிதிவண்டிகள் திருட்டு அதிகரித்துள்ளதாக ரெட் டீர் நகர்ப்புறப் பிரிவின் படைத்துறை அலுவலர் (கார்ப்பொரல்) டுவைன் ஹனுசிச் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தூண்டில் கார்களைப் போலவே,Read More →