Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடா விமான நிறுவனம், தங்களது ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. தனது 38,000 ஊழியர்களில் குறைந்தபட்சம் 20,000 ஊழியர்களை இது பாதிக்கும் எனவும், இந்த எண்ணிக்கை 22,800 வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கை எதிர்வரும் மாதம் ஜூன் 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து எயார்Read More →

Reading Time: 2 minutesகனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி. இன்று மாலை (May 15, 2020, 5:30 PM) கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே (Smiths Falls) மின் கம்பம் ஒன்றுடன் மோதிய மற்றொரு ஓட்டுநருக்கு உதவ தனது வாகனத்தை நிறுத்திய சுரேஷ் அவர்கள், உதவி செய்துகொண்டிருந்தவேளை 3வது வாகனம் விழுந்திருந்த மின் கம்பியின் மீது ஏறி உயரழுத்த மின்சாரம் தாக்கிRead More →

Reading Time: < 1 minuteவன்கூவரில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவியதற்கு பின்னர் 83சதவீதம் தீ விபத்துகள், அதிகரித்துள்ளதாக பொலிஸ் அலுவலர் டானியா விசிண்டின் தெரிவித்துள்ளார். கடந்த 10 வாரங்களில், வன்கூவர் முழுவதும் தொடர்ச்சியான சந்தேகத்திற்கிடமான தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து டானியா விசிண்டின் கூறுகையில், ‘மார்ச் 1ஆம் திகதி முதல் மே 11ஆம் திகதி வரை 99 தீ வைக்கும் குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியிலிருந்து 83Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வானிலை மேம்படுவதால் எதிர்வரும் ஜூன் மாத ஆரம்பத்தில், சில தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். பல வாரங்களாக வீடுகளிலேயே முடங்கி கிடந்த மக்களுக்கு பிரதமர் ஜஸ்டினின் இந்த அறிவிப்பு புத்துயிர் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் அரசின் நோக்கத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பின் மூலம், மக்கள்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தின் மீட்பு கட்டத்தின் முதல் கட்டம் குறித்து முதல்வர் டக் ஃபோர்ட் விபரித்துள்ளார். குயின்ஸ் பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நமது முயற்சிகள் பலனளிக்கின்றன. நாம் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினால், நாம் நமது காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், நாம் நிறைய வணிகங்களைத் திறந்து, அதிகமானவர்களை மீண்டும் வேலைக்கு அழைத்துச் செல்ல முடியும்’ எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 170பேர் உயிரிழந்ததோடு, 1,123பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,472ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 73,401ஆக அதிகரித்துள்ளது. மேலும், 31,838பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 36,091பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஉலககெங்கும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ள இவ்வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிமுகாமில் உறவுகள் அடிப்படை உணவு வசதிகூட இன்றி அல்லல்ப்பட்டுவருகின்றனர். அகதிமுகாமிக்கு அரசின் எவ்வித உதவியும் இதுவரை வழங்கப்படாத நிலையில், கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்கள் (Carleton Tamil Alumni) உதவியுள்ளார்கள் . மே 11ம் திகதியன்று, கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்களின் நிதியுதவியுடன், தமிழ்Read More →

Reading Time: < 1 minuteகனடிய பால்வள ஆணையத்தின் கடன் வரம்பு, 200 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் பால்வள ஆணையத்தின் கடன் வரம்பு 300 மில்லியன் டொலரிலிருந்து 500 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான பாலாடைக்கட்டி (சீஸ்) மற்றும் வெண்ணெய் சேமித்து வைப்பது தொடர்பான செலவுகளை இது ஈடுசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →