Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது. இதன்படி, கடந்த 24 மணித்தியால நிலவரப்படி கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,474ஆகும். அத்துடன், புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,760பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 116பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3,682ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், 30,884பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 24,908பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடா முழுவதும் உள்ள மாகாணங்கள், எதிர்வரும் வாரத்தில் சில அவசரகால விதிகளை தளர்த்தத் தயாராகி வருகின்றன. லோக்கடவுன் மையங்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் போன்ற வணிகங்கள் நாளை (திங்கட்கிழமை) ஒன்ராறியோவில் திறக்க அனுமதிக்கப்படும். அதே நேரத்தில் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடாரில் வசிப்பவர்கள், தங்கள் வீட்டைத் தவிர வேறு ஒரு வீட்டோடு தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மனிடோபா பல அத்தியாவசியமற்ற வணிகங்கள், உள்ளக உணவகங்கள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு முகாம்கள் மற்றும் பிறRead More →

Reading Time: < 1 minuteவகுக்கப்பட்டிருக்கும் சுகாதார நெறிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடித்தால், கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து ஒன்றாரியோ மாகாணம் விரைவில் மீண்டு வரும் என ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது குறித்து, நேற்று (சனிக்கிழமை) ஊகங்களுக்கு தெளிவுப்படுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தற்போது கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் குறைந்துக் கொண்டே செல்கின்றது. இந்த நிலைமை தொடர்ச்சியாக நீடித்தால், விரைவாகRead More →

Reading Time: < 1 minuteகியூபெக் மாகாண அரசு தொழிலார்களுக்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத் தொகையாக 13.10 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்முலம் அடிப்படை ஊதியத்த்தை பெற்று வந்தவர் வாரமொன்றுக்கு 22.50 கனடிய டொலரினை மேலதிக ஊதியமாக பெறுவார். குறித்த ஊதிய அதிகரிப்பு மே மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதனை, கியூபெக் மாகாண தொழிலாளர் அமைச்சர் ஜீன் பவுலட் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த ஊதிய அதிகரிப்பின் மூலம் 409,100 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இதுவரை 3,500இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 175பேர் உயிரிழந்ததோடு, 1,653பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 56,714பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3,566ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், 29,347பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 23,801பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இராணுவத் தரத் தாக்குதல் பாணி ஆயுதங்களுக்கு தடை விதிக்குமாறு, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கமைய, கனடாவில் 1,500 தாக்குதல் பாணி ஆயுதங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது. இந்த தடை உத்தரவானது, உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்கள் இந்த வகையான ஆயுதங்களை விற்பனை செய்வது, கொண்டு செல்வது, இறக்குமதி செய்வது அல்லது பயன்படுத்துவதைத் தடைசெய்கிறது. இந்த தாக்குதல் பாணி ஆயுதங்களை ஏற்கனவே வைத்திருக்கும் துப்பாக்கி உரிமையாளர்கள் தங்கள் உரிமையில் விலக்கு அளிக்கRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தவுள்ளதாக ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, மே மாதம் 4ஆம் திகதி தளர்த்தப்படும் கட்டுப்பாடுகளில் சில வணிகங்கள் மற்றும் பணியிடங்கள் மீண்டும் திறக்கப்படும் என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்ட வணிகங்களில் பருவகால வணிகங்கள் மற்றும் சில அத்தியாவசியக் கட்டுமானத் திட்டங்கள் அடங்கும். இப்போதே,Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கனடா தின நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என ரொறன்ரோ நகர சபை உறுதிப்படுத்தியுள்ளது. பட்டாசு வானவேடிக்கைக் காட்சிகள் உட்பட அனைத்து நேரடிக் கனடா தின நிகழ்வுகளும் இரத்து செய்யப்படுவதால், அதற்கு பதிலாக, நாடு உருவான நாளை ‘மெய்ந்நிகர் கனடா தின கொண்டாட்டங்களுடன்’ நகரம் கொண்டாடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரொறன்ரோ நகர சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கRead More →