Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை நெருங்குகிறது. இதன்படி, அங்கு கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,922ஆக உள்ளது. அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1426பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 176பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 4,408பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 31,542பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 28,972பேர்Read More →

Reading Time: < 1 minuteஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ரொறன்ரோவில் மட்டும் 500இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, நகர சுகாதார அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால், இதுவரை கனடாவில் ஒட்டுமொத்தமாக 63,496பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,232பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ரொறன்ரோவில் மட்டும் 504பேர் உயிரிழந்துள்ளதாக டாக்டர் எலைன் டி வில்லா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ரொறன்ரோவில் கொவிட்-19 காரணமாக 504பேர் உயிரிழந்த கதைகளை தொடர்ந்து கேட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடா முழுவதும் உள்ள மாகாணங்கள், நடைமுறையில் உள்ள சில இறுக்கமான விதிகளை தளர்த்தத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கடந்த திங்கட்கிழமை தோட்டக்கலை மையங்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் போன்ற வணிகங்களை திறக்க ஒன்ராறியோ அரசு அனுமதி அளித்தது. இந்தநிலையில் கடைபிடிக்கப்பட்டுவரும் இறுக்கமான கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கும் வகையில், பல சில்லறைக் கடைகளை மீண்டும் திறக்க ஒன்ராறியோ திட்டமிட்டுள்ளது. இதன்படி, மே 8ஆம், 9ஆம், 10ஆம் திகதிகள் என மூன்றுRead More →

Reading Time: < 1 minuteவின்னிபெக்கில் வீடற்றோருக்கான தனிமைப்படுத்தல் மையத்தில், இதுவரை கிட்டத்தட்ட 80 பேர் தனிமைப்படுத்த வந்துள்ளதாக ‘பிரதானத் வீதித் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் ரிக் லீஸ் தெரிவித்துள்ளார். மேலும், இவர்களில் பெரும்பாலானோர், நகரத்தின் அவசர மருத்துவ அறைகளிலிருந்து வந்தவர்கள் என அவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து, ‘பிரதானத் வீதித் திட்டம்’ (மெயின் ஸ்ட்ரீட் புராஜக்ட்) எனும் திட்டம் வீடற்றோருக்கான வசதிகளை வழங்கி வருகின்றது. அரசு முன்னெடுத்துவரும் பல்வேறு நலத்திட்டங்களின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலங்களில் 1450பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 189பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 63,496ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,232ஆக உயர்ந்துள்ளது. மேலும், 31,093பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 28,171பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் 14 கண்காணிப்பு மையங்களில் 330 வெளிநாட்டுப் பயணிகள், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பயணிகளுக்கு தற்போது தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இவர்கள் அனைவரும், கூட்டாச்சி அரசால் நடத்தப்படும் ஒன்ராறியோவில் உள்ள ட்ரெண்டோன், கோர்ன்வெல் கண்காணிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும், இதில், சீனாவின் வுஹானில் இருந்து நாடு திரும்புள்ளவர்கள், நோய்த் தொற்றுப் பரவலின் போது வந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பல் பயணிகள் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minuteகிரேக்கத்தில் கனேடிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தக், கனேடிய ஆயுதப்படைகளுக்கு தாமதமானது ஏன் என்ற கேள்விக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம் அளித்துள்ளார். கிரேக்கத்தில் இடம்பெற்ற கனேடிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தை உறுதிப்படுத்த கனேடிய ஆயுதப்படைகளுக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக கால தாமதமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து பிரதமர் ஜஸ்டினிடம் கேட்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது, பொதுமக்களுடன் தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு,Read More →

Reading Time: < 1 minuteநியூட்டன் ஹைலேண்ட் க்ரீக் பூங்காவில் காணாமல்போன சிறுவன், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) மாலை 5.45 மணியளவில் குடும்பத்துடன் இருந்த சர்ரே சிறுவன், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. குறித்த 14 வயது சிறுவன், நியூட்டனில் உள்ள ஹைலேண்ட் க்ரீக் பூங்காவில் கடைசியாக சைக்கிள் ஓட்டுவதைக் கண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பொலிஸாரின் ஹெலிகொப்டரும், சர்ரே தேடல் மற்றும் மீட்பு அணியும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.Read More →