Reading Time: < 1 minuteதனியார் முதியோர் இல்லம் ஒன்றில் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Dorval என்ற இடத்தில் அமைந்துள்ள Résidence Herron என்னும் முதியோர் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக 27 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். வரிசையாக அமரர் ஊர்திகள் அந்த முதியோர் இல்லத்திலிருந்து வெளியேறுவதைக் கண்ட முதியவர்களின் குடும்பத்தினர், அந்த இல்லத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முயன்று வருகின்றனர். அங்கு இறந்தவர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மக்கள் பல வாரங்களுக்கு வீடுகளில் தனித்திருப்பதைத் தவிர்க்க இயலாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும், சமூக தனிமனித இடைவெளிகள் அவ்வளவு சுலபமாக நீக்கப்பட வாய்ப்பில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். கனடாவில் இதுவரை 509 பேர் உயிரிழந்த நிலையில், இம்மாத நடுப்பகுதியில் இந்த எண்ணிக்கை 700ஆக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று மட்டும் அங்கு 82 உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடன் தற்போது பாதிக்கப்படுவோரின்Read More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ தனது தனிமைப்படுத்தலின் பின் முதன்முறையாக  அமைச்சரவைக்  கூட்டத்தை இன்று கூட்டவுள்ளார். கடந்த மார்ச் மாதம் 12ஆம்திகதி முதல் பிரதமர் ட்ரூடோ  வீட்டிலிருந்து பணிபுரிகிறார். பிரதமர்  ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டபின்  14 நாட்கள் தன்னைதானே ட்ரூடோ தனிமைப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து  அவர் வீட்டிலிருந்தே பணிபுரியத்  தொடங்கினார். இதேவேளை தொடர்ந்தும் தான்   வீட்டிலிருந்தே தொடர்ந்தும்  பணிபுரிவார்  எனவும்,  முக்கியமானRead More →

Reading Time: < 1 minuteகொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த வாரம் தொடக்கம் ரொறண்டோ பெரும்பாக மற்றும் கனேடிய படைகளின் போர்டன் (Borden) தளம் இடையேயான வீதிகளில் ஏராளமான கனடிய இராணுவத்தினரின் நடமாட்டங்களை காணலாம்.. டொரோண்டோ – போர்டன் (Borden) இராணுவ தளம் இடையேயான சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான இராணுவ வாகனங்கள் மற்றும் பணியாளர்களைப் பார்க்கக்கூடியதாக இருக்கும் என இன்றுஞாயிற்றுக்கிழமை தேசிய பாதுகாப்புத் துறை (டி.என்.டி) பொதுமக்களுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. திலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே மரணமடைந்துள்ளார். Ontario மாகாணத்தின் Kingston வைத்தியசாலையின் ஆலோசகரான இவர் மரணமடைந்துள்ளார். ஏற்கனவே வைத்தியர் கடமையில் இருந்து இளைப்பாறியி இவர், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட வைத்தியர்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மீண்டும் கடமையில் இணைந்து கொண்டவர். சில வாரங்கள் கொரோனா வைரஸ் நோயர்களுக்கு சிகிச்சையளித்து வந்தRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள கனேடியர்கள் குறிப்பாக பணியாளர்கள் மற்றும் சுயதொழிலாளர்களுக்கு அவசர நிதி உதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 4 வாரங்களுக்கு மேல் (வாரத்திற்கு $ 500 என்ற அடிப்படையில்) 2,000 டொலர்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த சலுகைக்கு விண்ணப்பிக்க ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸால் 15 ஆயிரம் பேரை இழக்க நேரிடலாம் என ஒன்ராறியோவில் உள்ள சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தீவிர நடவடிக்கைகள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளன எனவும் குறிப்பிட்டனர். சமீபத்திய வாரங்களில் ஒன்ராறியோ, அனைத்து மாகாணங்களையும் போலவே அத்தியாவசியமற்ற வணிகங்கள், பள்ளிகள், பொது இடங்கள் மற்றும் பூங்காக்களை மூடியுள்ளது. ஆனால் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புக்களின் எண்ணிக்கைRead More →

Reading Time: < 1 minuteஸ்காபுரோவில் பிறிம்லி அன் 401 சந்திப்பிற்கு அருகில் (Brimley and Pitfield roads, south of Sheppard Avenue East) கடந்த மார்ச் 13ம் திகதி காலை 10 மணிக்கு பட்டப்பகலில் 2 தமிழ் பெண்கள் சுடப்பட்டு இருந்ததாக பொலிஸிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 33 வயதுடைய தீபா சீவரத்தினம் (Theepa Seevaratnam) ஸ்தலத்திலேயே துப்பாக்கி சூட்டு காயங்களால் கொல்லப்பட்டிருந்தார். மற்றைய பெண்மணி துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்Read More →

Reading Time: < 1 minuteஅல்பேர்ட்டாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்ததோடு 64 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மாகாணத்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை ஒன்பது ஆகவும், நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 754 ஆகவும் உயர்த்தியுள்ளது என்றும் இதில் 77 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த கொரோனா தோற்றாளர்களில் எழுபத்தைந்து மாகாணத்திற்குள் கண்டறியப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது என மருத்துவர் தீனா ஹின்ஷா கூறியுள்ளார். அதன்பிரகாரம்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 260 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், இது மாகாணத்தின் மொத்த எண்ணிக்கையை 1,966 ஆகக் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் மே மாதம் வரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தொற்றுக்குள்ளான 291 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் 125 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும்Read More →