Reading Time: < 1 minuteகனடாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், நாட்டு மக்கள் ஆறுதல் அடையும் வகையில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து ஹென்றி கூறுகையில், ‘வைரஸ் வெளியில் எளிதில் பரவுவதாகத் தெரியவில்லை. வெளியே சென்று உங்கள் குடும்பத்தினருடன் விளையாடுங்கள். எங்கள் ஸ்கை ஹில்ஸ் வரை செல்லுங்கள். விஸ்லர் வரை செல்லுங்கள்’ என கூறினார். இதற்கிடையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து சர்வதேச பயணங்களுக்கும் எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது. மேலும் கோவிட்-19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்வரும் விமானங்களை கட்டுப்படுத்துகிறது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி கனடியர்களிடம் நாட்டிற்கு வெளியே உள்ள அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் ஒத்திவைக்க அல்லது இரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகள், நோய் பரவுவதைRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக கனடாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் பொதுநிகழ்வுகள் மற்றும் குடும்ப கொண்டாட்டங்கள் பலவும் பிற்போடப்பட்டு வருகின்றன. 250 பேருக்கு மேலாக ஒன்றுகூடுவது அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டிருப்பதோடு, முடிந்தவரை வீடுகளில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கனடிய வர்த்தக சம்மேளனம் உட்பட பல்வேறு தமிழர் கலை, கலாச்சார நிகழ்வுகள் பிற்போட்டிருப்பதாக அறிவித்திருகின்றது. இதேவேளை திருமணம், பிறந்தநாள் என பல்வேறு குடும்ப நிகழ்வுகளும் ஒத்திவரைக்கப்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteஉலகையே உலுக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான தற்கால அவசர நிலைமைகளை கையாள்வதில் எமது ஆலயங்களின் பங்களிப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அனைத்து ஆலய குருமார்கள் (Gurus), கோயில்களின் இயக்குநர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் நமது மதத்தின் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்பட்டுள்ளனர். CORONAVIRUS EPIDEMIC – URGNET MEETING All the Temple priests, members of the board of directors of temples and executiveRead More →

Reading Time: < 1 minuteஐந்து மாத விசாரணையின் பின்னர், 1 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கோக்கெயின் போதைப் பொருட்களை மனிடோபா பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். வின்னிபெக் பொலிஸ் சேவையின் துப்பாக்கிகள் மற்றும் கும்பல் பிரிவு, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல், மேற்கொண்ட விஷேட தேடுதலிலேயே குறித்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன்போது, 1,520,000 டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய 20 கிலோகிராம் கோகோயின், 90,600 டொலர்கள் பெறுமதியான மரிஜுவானாவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்று கனடாவில் மிக வேகமாக பரவிவருகின்ற நிலையில், மாகாணத்தில் வரவிருக்கும் நடுவர் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர் நீதிமன்ற உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பான தகவல் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் இந்த நேரத்தில் எதிர்கால திட்டங்களுக்கான நடுவர் தேர்வை இடைநிறுத்தியுள்ளது. வரவிருக்கும் விடயங்களுக்கான நடுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியான நிலையில், தற்போது மனைவியான சோபி கிரேகோயரோவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் இருக்கும் முக்கிய தலைவர்களையும் தாக்கி வருகிறது. குறிப்பாக ஈரானில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர். அதே போன்று பிரித்தானியாவின் சுகாதார துறை அமைச்சரும்Read More →

Reading Time: < 1 minuteகியூபெக் பிரீமியர் பிரான்சுவா லுகோ அனைத்து கணிசமான உட்புற நிகழ்வுகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் COVID – 19 பரவுவதைக் கட்டுப்படுத்த வீட்டிலேயே தங்குமாறு மக்களில் பெரும் பகுதியினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.  250 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ளும் அனைத்து உட்புற –நிகழ்வுகளையும் அரசாங்கம் தடை செய்கிறது  நாட்டிற்கு வெளியில் இருந்து வருபவர்கள் எங்கிருந்து வந்தாலும் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். சுகாதார மற்றும் கல்வி முறைகளில் பொதுத்துறை ஊழியர்களுக்கு இது கட்டாயமாகும் பள்ளிகள் திறந்த நிலையில் உள்ளன, ஆனால் ஒரே அறையில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கக்கூடாது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் எவரும் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய எவரும் வீட்டிலிருந்தே வேலை ஸ் செய்யவேண்டும். 13 நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, 136 நோயாளிகள் இன்னும் விசாரணையில் உள்ளன. இருவர் தற்போது மருத்துவமனையில் உள்ளனர். உங்களிடம் COVID-19 அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால் மற்றும் ஒரு சுகாதார பராமரிப்பு நிபுணரின் வழிகாட்டுதலை விரும்பினால் 811 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும் COVID-19 பற்றி மேலும் விபரம் தெரிந்துகொள்ள நீங்கள் 1-877-644-4545 என்ற இலக்கத்தை அழைக்கலாம். கியூபெக் அரசாங்கமும் அவர்களின் வலைத்தளத்தில் புதிய தகவல்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றனர். Sante Montreal: https://santemontreal.qc.ca/en/public/coronavirus-covid-19/Read More →

Reading Time: < 1 minuteCOVID-19 தொற்று நோயை எதிர்கொள்ளும் வகையில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் நடத்தப்படும் வருடாந்த தொழில் முனைவோர் விருதுகள் விழா பிற்போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 25, 2020 நடைபெறவிருந்த விழா ஜூலை 25, 2020 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: 2 minutesஅன்புள்ள பக்தர்கள், புரவலர்கள்,அர்ச்சகர்கள் மற்றும் கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் COVID-19 தொடர்பாக உள்ளூர், மாகாண மற்றும் மத்திய பொது சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைக் கவனித்து, கோயில் நிர்வாகம் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்தும். இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். 1.1 பக்தர்கள் “அர்ச்சனை தட்டை சன்னதிக்கு முன்னால் மேசையில் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தயவுசெய்துஅர்ச்சனை தட்டை அர்ச்சகரிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டாம்.Read More →