Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராட இராணுவத்தை பயன்படுத்த இதுவரை திட்டமிடவில்லை, ஆனால் இதுவும் தங்கள் திட்டத்தில் இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கனடாவில் 10 மாகாணங்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கனடாவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை 5,655 ஆக இருந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று  6,280Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி ஜோர்ஜ் ட்ரூடோ பூரண குணமடைந்துள்ளார். கடந்த 12ம் திகதி அவர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைகளுக்கு பின்னர் சோஃபி பூரண குணமடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குணமடைந்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள சோஃபி, நான் பூரண குணமடைந்துள்ள அதேவேளை எனது மருத்துவர் மற்றும் ஒட்டாவா மருத்துவ பிரிவுRead More →

Reading Time: < 1 minuteஒன்ராரியோவில் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மார்ச் 17, 2020 பின் விலை உயர்த்தப்பட்டிருந்தால் நீங்கள் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு அறிவிக்கவும். அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை அதிகரிக்கப்பட்டிருந்தால் 1 வருடம் சிறை, $100, 000 வரை அபராதம். ஒண்டாரியோ முதல்வர் அறிவிப்பு. இணைய இணைப்பு: https://www.ontario.ca/form/report-price-gouging-related-covid-19 தொலைபேசி இலக்கம்: 1-800-889-9768Read More →

Reading Time: < 1 minuteகொரோன வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவையென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் ஜீ-20 நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், இதற்கு தேவையான அனைத்தையும் செய்வதற்கு அனைவரும் உறுதியுடன் இருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். கனேடியர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைக் கனேடிய அரசு எடுக்கும் என்றும் கனடாவிற்கு திரும்பிவரும் பயணிகளில் பலர் நாடு திரும்பியதும் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளாதிருக்கும்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து நாடுமுழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 250,000 மாணவர்களுக்கு ஒன்லைன் மூலம் பாடங்களை வழங்குவதற்கான திட்டத்தை ஒன்ராறியோவின் பாடசாலை நிர்வாகம் உருவாக்கி வருகிறது. இதுகுறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், “ரொறன்ரோ மாவட்ட பாடசாலை வாரியம், பாடசாலைகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று தங்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் பாடத்திட்டத்தை வீட்டிலேயே மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் தொடர்பாக செயற்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டபடி 2020Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கனடா எல்லை பகுதியில் தனது படையினை நிறுத்தும் அமெரிக்காவின் யோசனைக்கு கனடா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் குறித்த முன்னெடுப்பு தேவையற்ற ஒன்று எனவும், குறித்த நடவடிக்கையினால் இரு தரப்பு உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு எனவும் கனடா நேற்று தெரிவித்துள்ளது. மேலும் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்துடன் கடந்த 18 மாதங்களாக தாம் நல்ல உறவினை பேணிவரும்Read More →

Reading Time: < 1 minuteஒண்டாரியோவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 85 புதிய நோயாளர்கள் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளதாக சற்றுமுன் ஒண்டாரியோ அரசு தெரிவித்துள்ளது . நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து செல்வத்தையும், நிலைமை எல்லை மீறி போவதாகவும், நிலைமை இப்படியே தொடர்ந்தால், மேலும் கடும் நடவடிக்கையை எடுத்து இந்த நிலைமையை சமாளிக்க வேண்டி ஏற்படும் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteஇவ்வருடம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற இருந்தது. ஆனால், தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கொரோனா அச்சம் காரணமாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு ஒலிம்பிக் கமிட்டிகள் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கனடாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13 பேரும் ஒன்ராறியோவில் 6 பேரும் கியூபெக்கில் 04 பேரும் அல்பேர்ட்டாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு இத்துறவை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2,091 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதிலும் ஒன்ராறியோவில் 503 பேரும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 472Read More →

Reading Time: < 1 minuteரொறோண்டோவைச் சேர்ந்த 70 வயதுள்ள ஒருவர் கோவிட்-19 வியாதிக்குப் பலியாகியுள்ளதாக ரொறோண்டோ பொதுச் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவரது மரணம் ரொறோண்டோவின் முதலாவது கொரோனாவைரஸ் மரணமாகக் கருதப்படுகிறது. இன்று (ஞாயிறு) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில், மரணமாகியவர் சமீபத்தில் இங்கிலாந்துக்குச் சென்று வந்தவர் என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரொறோண்டோவிலுள்ள ஒரு மருத்துவமனையில் அவர் பரிசோதிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவர் சுய தனிமையைப் பேணியிருந்தார் எனவும் அவர் பற்றிய தகவல்கள் மருத்துவமனையினால் பொதுச்சுகாதாரத்Read More →