Reading Time: < 1 minuteகியூபெக் கிரேஸ்ஃபீல்ட்டில் மிதமான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3:06 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 3.0 ரிக்டர் அளவில் பதிவானது. எனினும், குறித்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித பதிவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஒட்டாவாவிலிருந்து வடமேற்கே 100 கிலோமீட்டர் அல்லது கிரேஸ்ஃபீல்டில் இருந்து வடமேற்கே 26 கிலோமீட்டர் தொலைவில் உருவானதாக கூறப்படுகின்றது. கியூபெக் மணிவாக்கியில்,Read More →

Reading Time: < 1 minuteசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கனேடியர்கள் வைரஸ் பரவாமல் தடுக்க இரண்டு வாரங்கள் இராணுவத் தளத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று Global Affairs Canada தெரிவித்துள்ளது. சிக்கித் தவிக்கும் கனடியர்களை சீனாவின் வுஹானில் இருந்து வெளியேற்றுவதற்காக, அரசாங்கம் ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து Global Affairs Canada வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விமானம் சீன அரசாங்கத்திடமிருந்து தேவையான அங்கீகாரத்தைப் பெற்றவுடன் வுஹானுக்குச் செல்வதற்கு முன் வியட்நாமின்Read More →

Reading Time: < 1 minuteசீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் கொரோனா வைரஸை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தமது நாடுகள் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர் என வெள்ளிமாளிகை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த கலந்துரையாடலில், கடந்த புதன்கிழமை கையெழுத்திட்ட வட அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை குறித்தும்,Read More →

Reading Time: < 1 minuteதெற்கு அல்பேர்ட்டாவிற்கு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், குளிர்கால புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால், பான்ஃப், யோஹோ மற்றும் கூட்டெனே தேசிய பூங்காக்கள் வழியாக பயணம் செய்பவர்கள் அவதானமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையில், ‘லூயிஸ் ஏரியில் கடும் பனி மற்றும் தெற்கு அல்பேர்ட்டாவில் அதிக காற்று வீசும் என்பதால், மழையானது பான்ஃப்பில் பனியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பான்ஃப்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவின் ஃபோர்ட் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், நால்வர் படுகாயமடைந்துள்ளனர். ஃபோர்ட் யார்க் பவுல்வர்ட் மற்றும் குயின்ஸ் வார்ஃப் வீதிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10:20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், மேலும் மூவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவசர மருத்து பிரிவினர் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்திலேயே இந்த துப்பாக்கி சூடுRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் 100இற்க்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா வைரஸ் நோயறிதல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயறிதலின் தற்போதைய நிலைக் குறித்து ஊடகளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்த மாதத்தில், வைரஸிற்கான நோயறிதல் பரிசோதனையை மேற்கொண்டதிலிருந்து இதுவரை 114 மாதிரிகளை நோய் கட்டுப்பாட்டு மையம் பரிசோதித்துள்ளது. வின்னிபெக்கில் உள்ள ஒருRead More →