Reading Time: < 1 minuteகனடாவில் இருந்து இன்னும் சில வாரங்களில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருக்கும் இலங்கை குடும்பம் கனடா அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளது. கல்கரியில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த உதய நிஷான் பெர்னாண்டோ, சுலக்‌ஷணா தம்பதி தங்கள் மூன்று குழந்தைகளுடன் மார்ச் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர். கனடாவில் தொடர்ந்து வாழ்வதற்கான எல்லா வழிகளும் அடைபட்டுவிட்ட நிலையில், பெர்னான்டோவுக்கு கடைசி வழி மனிதநேய மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பம்தான். நாடுRead More →

Reading Time: < 1 minuteஅவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்று தீவொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளம் தம்பதிக்கு கனடா அடைக்கலம் வழங்கியுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு டிமா என்ற பாலஸ்தீனியப் பெண் அகதி, பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானார். ஹானி என்பவருடன் அவுஸ்ரேலியா செல்ல முடிவெடுத்த டிமா படகுப் பயணம் மூலம் அவரது கணவருடன் சென்றநிலையில் நாயுறு தீவில் சிறை வைக்கப்பட்டார்கள். இதன்போது,  கர்ப்பமுற்றிருந்த அவர் பல இன்னல்களுக்கு மத்தியில் வைத்தியசாலை செல்வதற்காக தனியாக டிமாவுக்கு மட்டும் அவுஸ்ரேலியாவுக்குள் செல்லRead More →

Reading Time: < 1 minuteஎட்மன்டனை தளமாகக் கொண்ட கஞ்சா நிறுவனமான அரோரா கஞ்சா நிறுவனம், சுமார் 500 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அத்தோடு, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெர்ரி பூத்தையும் அப்பதவியிலிருந்து அந்நிறுவனம் நீக்கியுள்ளது. மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக சுமார் 500 முழுநேர சமமான ஊழியர்களை நீக்கியுள்ளதாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கங்களால் எந்த நிலைகள் பாதிக்கப்படும் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், அதனை எதிர்கொள்ள நிறுவனம் தயாராவுள்ளதாக கூறப்படுகின்றது. தலைமைRead More →

Reading Time: < 1 minuteஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் ஐந்து கனேடியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த கப்பலில் உள்ள 251 கனேடியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் இந்த எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. ஜப்பானிய சுகாதார அமைச்சகம் நடத்திய, சமீபத்திய சோதனைகளில் அடையாளம் காணப்பட்ட 41 கொரோனா வைரஸ் தொற்று பிரஜைகளில், கனேடியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா வைரஸ்Read More →

Reading Time: < 1 minuteசீனாவில் இருந்து அழைத்துவரப்பட்ட 176 கனேடியர்களும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சீனாவிலுள்ள கனேடியர்களை பாதுகாக்கவும், அங்குள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வரவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்கமைய, சீனாவின் வுஹானில் இருந்து 176 கனடியர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம் நேற்று (வியாழக்கிழமை) இரவு 9 மணியளவில வன்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய விமானம்,Read More →

Reading Time: < 1 minuteஸ்கார்பாரோவில் உள்ள சிடர்பிரே கல்லூரியில் துப்பாக்கி சூடு காரணமாக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணமாகவே கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மார்க்கம் வீதி மற்றும் லாரன்ஸ் அவென்யூ கிழக்கு பகுதியில் உள்ள சிடர்பிரே கல்லூரியில், நேற்று (புதன்கிழமை) மதியம் 1:10 மணியளவில் இந்த துப்பாக்கிச்Read More →

Reading Time: < 1 minuteஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் 251 கனேடியர்கள் உள்ளடங்குவதாகவும், அவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை கரைக்கு கொண்டு சென்று தற்போது சிகிச்சை வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்களின் நலன் மற்றும் சிகிச்சை குறித்து ஜப்பானிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜப்பானியத் துறைமுகமான யோகோகாமாவில் தரித்து நிற்கும் பயணிகள் கப்பலில் உள்ளவர்களில்Read More →

Reading Time: < 1 minuteஒக்ஸ்போர்ட்- எல்ஜினில் ஓபியாய்ட் தொடர்பாக அவசரகாலதுறைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்தும் அதிகரித்துவருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் ஜனவரி 19ஆம் திகதி முதல் பெப்ரவரி 1ஆம் திகதி வரையிலான இரண்டு வார காலப்பகுதியில் வூட்ஸ்டாக், டில்சன்பர்க், இங்கர்சால் மற்றும் செயின்ட் தாமஸ் ஆகிய இடங்களில் மருத்துவமனை அவசர துறைக்கு 19பேர் வருகை தந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுகாதார அதிகாரிகளின் அறிக்கையின் படி, வாரத்திற்கு சராசரியாக ஐந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடியேறியுள்ள ஹரி – மேகன் தம்பதிக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளால் ஏற்படும் செலவுகளை கனேடிய அரசாங்கம் ஏற்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு ஆர்ச்சி என்ற, 8 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் அரசு குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகுவதாக, ஹரி – மேகன் தம்பதியினர் அறிவித்தனர். இதற்குRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் கடற்கரையில் கடுமையான பனிப்பொழிவு பெய்யலாம் என கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பகுதியில், ஐந்து முதல் 20 சென்டிமீட்டர் வரை ஈரமான, கடும் பனி பெய்யலாம் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். மெட்ரோ வான்கூவரில் இருந்து ஃப்ரேசர் பள்ளத்தாக்கு வரையிலான ஒரு பகுதியிலும், சன்ஷைன் கடற்கரையையும் உள்ளடக்கிய பகுதியிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,Read More →

Reading Time: < 1 minuteவின்னிபெக்கைத் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தாக்கிய பனிப் புயலில் இருந்து, நகரரை மீட்டெடுக்கும் பணிக்கு, நிதி பற்றாக்குறையாக இருப்பதாக நகர நிதிக்குழு தெரிவித்துள்ளது. புயலால் விழுந்த ஆயிரக்கணக்கான மரங்களையும் கிளைகளையும் சுத்தம் செய்யவும், வீதிகளில் சூழ்ந்திருந்த பனிகளை அகற்றுவதற்கும், ஏற்கனவே 6.4 மில்லியன் டொலர்கள், ஒதுக்கப்பட்டது. ஆனால். இவ்வாறான துப்பரவு பணிகளில் இன்னமும் முழுமையடையாத நிலையில், மேலும், 1.1 மில்லியன் டொலர்கள் ஈட்டப்படுவதன் மூலம் குறித்த பணிகள் முழுமையடையும்Read More →

Reading Time: < 1 minuteவன்கூவரில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈவா அன்ட் கோ. விக்ஸ் நிறுவனத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தலா 2,500 டொலர்கள் மதிப்புள்ள 150 செயற்கை தலைமுடிகளை 53 வயதான மார்ட்டின் வைகெல்ட் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் குறித்த நபருக்கு வன்கூவரில் உள்ள டவுன்டவுன்Read More →

Reading Time: < 1 minuteகியூபெக் கிரேஸ்ஃபீல்ட்டில் மிதமான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3:06 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 3.0 ரிக்டர் அளவில் பதிவானது. எனினும், குறித்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித பதிவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஒட்டாவாவிலிருந்து வடமேற்கே 100 கிலோமீட்டர் அல்லது கிரேஸ்ஃபீல்டில் இருந்து வடமேற்கே 26 கிலோமீட்டர் தொலைவில் உருவானதாக கூறப்படுகின்றது. கியூபெக் மணிவாக்கியில்,Read More →

Reading Time: < 1 minuteசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கனேடியர்கள் வைரஸ் பரவாமல் தடுக்க இரண்டு வாரங்கள் இராணுவத் தளத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று Global Affairs Canada தெரிவித்துள்ளது. சிக்கித் தவிக்கும் கனடியர்களை சீனாவின் வுஹானில் இருந்து வெளியேற்றுவதற்காக, அரசாங்கம் ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து Global Affairs Canada வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விமானம் சீன அரசாங்கத்திடமிருந்து தேவையான அங்கீகாரத்தைப் பெற்றவுடன் வுஹானுக்குச் செல்வதற்கு முன் வியட்நாமின்Read More →

Reading Time: < 1 minuteசீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் கொரோனா வைரஸை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தமது நாடுகள் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர் என வெள்ளிமாளிகை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த கலந்துரையாடலில், கடந்த புதன்கிழமை கையெழுத்திட்ட வட அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை குறித்தும்,Read More →

Reading Time: < 1 minuteதெற்கு அல்பேர்ட்டாவிற்கு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், குளிர்கால புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால், பான்ஃப், யோஹோ மற்றும் கூட்டெனே தேசிய பூங்காக்கள் வழியாக பயணம் செய்பவர்கள் அவதானமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையில், ‘லூயிஸ் ஏரியில் கடும் பனி மற்றும் தெற்கு அல்பேர்ட்டாவில் அதிக காற்று வீசும் என்பதால், மழையானது பான்ஃப்பில் பனியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பான்ஃப்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவின் ஃபோர்ட் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், நால்வர் படுகாயமடைந்துள்ளனர். ஃபோர்ட் யார்க் பவுல்வர்ட் மற்றும் குயின்ஸ் வார்ஃப் வீதிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10:20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், மேலும் மூவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவசர மருத்து பிரிவினர் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்திலேயே இந்த துப்பாக்கி சூடுRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் 100இற்க்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா வைரஸ் நோயறிதல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயறிதலின் தற்போதைய நிலைக் குறித்து ஊடகளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்த மாதத்தில், வைரஸிற்கான நோயறிதல் பரிசோதனையை மேற்கொண்டதிலிருந்து இதுவரை 114 மாதிரிகளை நோய் கட்டுப்பாட்டு மையம் பரிசோதித்துள்ளது. வின்னிபெக்கில் உள்ள ஒருRead More →