Reading Time: < 1 minuteசமீபத்திய வாரங்களில் பயணிகளிடமிருந்து 3,000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாக கனேடியப் போக்குவரத்து நிறுவனம் (சி.டி.ஏ) தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 15ஆம் முதல் பெப்ரவரி 13ஆம் திகதி எட்டு வார காலப்பகுதியில் மொத்தம் 3,037 முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. விமானத் தாமதம் மற்றும் விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதற்கு, விமான நிறுவனங்கள் 1,000 டொலர்கள் வரை இழப்பீடாகச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார். ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார். இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் நான்கவது கொரோனா வைராஸ் தொற்று பதிவாகியுள்ளதாக, ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ் பூங்காவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒன்ராறியோவின் சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ், ஒன்ராறியோவின் இணை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா யாஃப் மற்றும் ரொறன்ரோவின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா ஆகியோர் இதனை வெளிப்படுத்தினர். இதன்போது, 20 வயதான டி வில்லாRead More →

Reading Time: < 1 minuteவின்ட்சர்-எசெக்ஸ் மற்றும் சாதம்-கென்ட் ஆகிய பகுதிகளுக்கு கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் குளிர்கால புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ‘டெக்சாஸ் லோ’வில் இருந்து வரும் குளிர்கால புயல் தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதியை பாதிக்கக்கூடும் என்று கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டது. நாளை (புதன்கிழமை) காலை நேரங்களில் தென்மேற்கு ஒன்ராறியோவில் பனி பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, மொத்த பனிப்பொழிவு அளவு வியாழக்கிழமை காலை 10 முதல் 25 செ.மீRead More →

Reading Time: < 1 minute2020ஆம் ஆண்டில் சிறு வணிகங்களுக்கும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கும், சொத்து வரி நிவாரணம் வழங்க உள்ளூர் அரசாங்கங்களை அனுமதிக்கும் வகையில் புதிய இடைக்கால திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சொத்து மதிப்புகள் உயர்ந்து வருவதால் அதிக குத்தகைக்கு போராடும் வணிகங்கள், இலாப நோக்கற்ற மற்றும் கலை மற்றும் கலாச்சார இடங்களுக்கு உதவுவதே இந்த நடவடிக்கை என்று நகராட்சி விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் செலினா ராபின்சன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், பிரிட்டிஷ் கொலம்பியர்களுக்குRead More →

Reading Time: < 1 minuteஇரகசிய முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் (கிளியர்வியூ ஏஐ) ஹாமில்டன் பொலிஸார் அணுகியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், துணைத் தலைவர் பிராங்க் பெர்கனால் சர்ச்சைக்குரிய இந்த தொழில்நுட்பத்தை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஹாமில்டன் பொலிஸ் சேவை கிளியர்வியூ ஏஐக்கான உள்நுழைவு சான்றுகளை ஒரு சோதனைக் காலத்தின் ஒரு பகுதியாக வழங்கியுள்ளது என்று சேவையின் தகவல் சுதந்திரக் கிளையிலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை எந்தவொரு புலனாய்வு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தவில்லை என்றுRead More →

Reading Time: < 1 minuteஎட்மண்டனில் இருவர் 100 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக எட்மண்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 25 வயதான ஆண் ஒருவரும், 22 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இதில் 25 வயது இளைஞன் 51 குற்றச்சாட்டுகளையும், 22 வயது பெண் 49 குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனைத்து குற்றச்சாட்டுகளும் உடைத்தல் மற்றும் அத்துமீறி நுழையும் குற்றங்களுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் நிலத்தடி பார்க்கிங் வாகன திருத்தும் இடங்களில்Read More →

Reading Time: < 1 minuteமானிட்டோபாவில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக, சமீபத்திய இன்ஃப்ளூயன்ஸா கண்காணிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பெறப்பட்ட அறிக்கையின்படி, இந்த காய்ச்சல் பருவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சேகரித்த தரவுகளைச் சேர்த்த மிக சமீபத்திய அறிக்கையில், இன்ஃப்ளூயன்ஸா ஏ 74 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பி 22, 96 ஆய்வக உறுதிப்படுத்தப்பட்ட பதிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.Read More →

Reading Time: < 1 minuteமனிடோபாவில் செயின்ட் போனிஃபேஸ் உதிரிப்பாக கடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். புரோவெஞ்சர் பவுல்வர்ட் மற்றும் செயின்ட் ஜோசப் வீதியின் மூலையில் உள்ள ஒரு உதிரிப்பாக கடையிலேயே நேற்று (வியாழக்கிழமை) இரவு 8 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள ஐந்து குடியிருப்பாளர்களும், சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒருவருமே இவ்வாறு தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களின் காயங்களின் தன்மை குறித்து தெளிவானRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆறாவதாக ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃப்ரேசர் ஹெல்த் பிராந்தியத்தில் வசிக்கும் 30 வயதான ஒரு பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் ஈரானுக்கான பயணத்திலிருந்து திரும்பி வந்த நிலையிலேயே, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பெண் ஈரானுக்கு மட்டுமே விஜயம்Read More →

Reading Time: < 1 minuteகல்கரியின் பரபரப்பான மருத்துவமனைகளில் ஒன்றை விரிவாக்க நிதியளிப்பதாக அல்பர்ட்டா அரசு தெரிவித்துள்ளது. 1988ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பீட்டர் லூகீட் மருத்துவமனை அதன் அவசர அறையை விரிவுபடுத்துவதற்கும் மேலும் மனநல சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் 137 மில்லியன் டொலர்களைப் பெற உள்ளது. இதுகுறித்து தலைமை நிர்வாகி ஜேசன் கென்னி கூறுகையில், ‘மருத்துவமனை கட்டப்பட்டதிலிருந்து கல்கரியின் மக்கள் தொகை இரு மடங்காக அதிகரித்துள்ளது, அதைப் பார்க்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த மருத்துவமனையில்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர். முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அவர் தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என மாகாண சுகாதார அதிகாரி போனி ஹென்றி கூறுகிறார். தற்போது மூன்று பேருக்கு கொரோனா வைரஸிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும், அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதுதவிர, மாகாணத்தில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்களுக்கான எந்த அறிகுறியும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், விமான நிலையத்தின் அருகில் சிறிய ரக விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொன்றியலின் (Montreal) மேற்கும் பகுதியில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. Cessna-150 என்ற இரண்டு இருக்கைகளைக் கொண்ட சிறிய ரக விமானம் அங்கிருந்த விமான நிலையம் அருகில் பறந்துசென்றபோது திடீரென கீழே விழுந்து நொருங்கியது. இதில் விமானத்தில் இருந்த 20Read More →