Reading Time: < 1 minuteமத்திய ஒட்டாவாவின் மேற்கே அடுக்குமாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரிட்டானியா பூங்காவின் கிழக்கு எல்லையின் ஜெஃபிர் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி கட்டடமொன்றிலேயே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2:50 மணியளவில் இந்த தீவிபத்து சம்பவித்துள்ளது. இந்த தீவிபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், உணர்வற்ற நிலையில் ஒருவரை கண்டுள்ளனர். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதனை உறுதி செய்தனர். இதன்பிறகு படுகாயங்களுடன் காணப்பட்டRead More →

Reading Time: < 1 minuteமெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் நாட்களில் அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என்பதால், அங்குள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மெட்ரோ வன்கூவர், ஃப்ரேசர் பள்ளத்தாக்கு மற்றும் வான்கூவர் தீவின் சில பகுதிகளுக்கு தற்போது சிறப்பு வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில், மெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் நாட்களில் 25 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆகையால் வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும்,Read More →

Reading Time: < 1 minuteஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமான விபத்து குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தியது ஈரான் தான் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ”உக்ரேன் விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தியது ஈரான் தான். இதற்காக ஆதாரம் கிடைத்துள்ளது. எங்கள் உளவுத்தகவல்கள் மட்டுமல்ல எங்கள் நேசநாடுகளின் உளவுத்தகவல்களும் இதுனை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இதனை ஈரான் திட்டமிட்டுRead More →

Reading Time: < 1 minuteதண்டர் பேயில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையின் பின்னர், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளாவெட் வீதியின் 200 தொகுதிகளில் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) தண்டர் பே பொலிஸ் சேவை, நிஷ்னாவ்பே அஸ்கி பொலிஸ் சேவை மற்றும் ஒன்றாரியோ அதிகாரிகள் விஷேட தேடுதல் நடவடிக்கையொன்றினை நடத்தினர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான கோகோயின், கிராக் கோகோயின் மற்றும் ஃபெண்டானைல் மற்றும் பணம் என்பவற்றினை வைத்திருந்த குற்றச்சாட்டில், நால்வரை பொலிஸார் கைதுசெய்தனர். இதன்போதுRead More →

Reading Time: < 1 minuteகிறிஸ்மஸ் வாரத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில், நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்பட்ட அறிக்கையில், ஒருவர் உயிரிழந்ததோடு 23 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். மிடில்செக்ஸ்-லண்டன் சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள, சீசனின் முதல் இன்ஃப்ளூயன்ஸா கண்காணிப்பு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. லண்டன் பிராந்தியத்தில் காய்ச்சல் செயற்பாடு டிசம்பர் 15ஆம் திகதி 2019ஆம் ஆண்டு முதல் ஜனவரி 4ஆம் திகதி 2020 வரை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்,Read More →

Reading Time: < 1 minuteவெஸ்ட் எண்ட் வின்னிபெக் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லிஸ் அவென்யூ அருகே மேரிலேண்ட் வீதியி கைவிடப்பட்ட, 4 மாடி, சிவப்பு செங்கல் கட்டடத்தில் நேற்று (புதன் கிழமை) இரவு 8 மணிக்கு முன்னதாக இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தை தொடர்ந்து, கட்டடத்திலிருந்த 50பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், அருகிலுள்ள பல வீடுகளில் உள்ள பலர் வெளியேற்றப்பட்டதாகவும், தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். மேலும்,Read More →

Reading Time: < 1 minuteஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 63 கனேடியர்களும் அடங்குவதாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் வடிம் பிரிஸ்ரைகோ (Vadym Prystaiko) தெரிவித்துள்ளார். இவ்விபத்தில் ஈரான், உக்ரைன், சுவீடன், ஆப்கானிஸ்தான், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்குச் சொந்தமான போயிங்-737 என்ற விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது. மேலும் இயந்திரக் கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம்Read More →

Reading Time: < 1 minuteடொரோண்டோவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞனவே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காணாமல் போன இளைஞன் பழுப்பு நிற ஜெக்கெட் மற்றும் கணுக்கால் உயரத்தில் குளிர்கால பூட்ஸ் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவர் தொடர்பான தகவல்கள் தெரித்தால் ரொறன்றோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஈராக்கிலுள்ள அமெரிக்கப் படையினரின் தளங்களை இலக்குவைத்து ஈரானினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் கனேடியத் துருப்புக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு இலக்கான எர்பில் விமானத் தளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் கனேடியத் துருப்புக்களும் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில் குறித்த விமானத் தளத்தில் கனேடியத் துருப்புக்களோ அல்லது பணியாளர்களோ பாதிப்புக்குள்ளாகவில்லை என கனடாவின் பாதுகாப்புப் படையின் தலைவர் ஜெனரல் ஜொனதன் வான்ஸ் தனதுRead More →