Reading Time: < 1 minuteஅவுஸ்ரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல்போனதாகக் கூறப்பட்ட விமானம் வெடித்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் அல்பயின் பிராந்தியத்தில் இன்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த கனடாவுக்கு சொந்தமான விமானம் காணாமல் போயிருந்தது. இந்நிலையில், குறித்த விமானம் வெடிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறித்த வெடிப்பினால் அவ்விமானத்தில் இருந்த மூவரும் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீயணைப்புக்காக பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய மருத்துவ சங்க இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் தொற்றுநோய்கள், விபத்துகள், தற்கொலைகள் உள்ளிட்டவை இருமடங்காக அதிகரித்துள்ளமைக்கும் உணவு பற்றாக்குறையே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய மக்களில் அதிகமானவர்கள் ஆரோக்கியமான உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்ளாத காரணத்தால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் நேரத்தில் தாம் தொடர்ந்தும் பாப்பராசி எனப்படும் ஒளிப்படம் எடுப்பவர்களால் துன்புறுத்தப்படுவது குறித்து இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளனர். வன்கூவர் தீவில் உள்ள ஒரு பொது பூங்கா வழியாக மேகன் உலா வருவதைக் காட்டும் படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட பின்னர் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். மகன் ஆர்ச்சியுடனும் மற்றும் தனது இரண்டு நாய்களுடன் மேகன் நடந்து செல்லும்போதுRead More →

Reading Time: < 1 minuteபிரித்தானிய அரச குடும்பத்தின் கடமைகளிலிருந்து விலகி ஒரு புதிய வாழ்க்கைக்குத் தயாராகின்ற நிலையில் இளவரசர் ஹரி கனடாவுக்கு வந்துள்ளார் இளவரசர் ஹரி இன்று செவ்வாய்க்கிழமை காலை வன்கூவர் தீவில் தனது மனைவி மேகன் மற்றும் அவர்களது எட்டு மாத மகன் ஆர்ச்சியுடன் மீண்டும் இணைந்தார். அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் நிலையில் இருந்து பின்வாங்குவதைத் தவிர உண்மையில் தனக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்திருந்த ஹரி, எதிர்வரும் வசந்த காலத்தில்Read More →

Reading Time: < 1 minuteஎட்மண்டன் நகரத்தில் வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படவுள்ளது. குறித்த இடைக்கால தடை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு வாரம் கடுமையான குளிரைத் தொடர்ந்து, தடை விதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேச இன்று (செவ்வாய்க்கிழமை) நகர சபை அதிகாரிகள் கூடவுள்ளனர். இந்த நிலையில் கடுமையான பனியைத் தொடர்ந்து வாகன தரிப்பிடங்கள் மட்டுமல்லாமல் வீதிகளிலும் பனி நிரம்பியுள்ளது. இதனால் வாகனங்களை நிறுத்த தடைRead More →

Reading Time: < 1 minuteஎண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஆல்பர்ட்டா கிராமப்புற நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளின் அளவு, கடந்த ஆண்டை விட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆல்பர்ட்டா கிராமப்புற நகராட்சி தெரிவித்துள்ளது. ஆல்பர்ட்டா கிராமப்புற நகராட்சி கீழுள்ள நிறுவனங்கள் மொத்தமாக 173 மில்லியன் டொலர்கள் கடன்பட்டிருப்பதாகக் ஆல்பர்ட்டா கிராமப்புற நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வசந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இது 114 சதவீதம் அதிகம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteவன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணிக்க, மாகாண அரசு கண்காணிப்பு கிணறுகளை அமைத்து வருகிறது. கோவிச்சன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கோக்ஸிலா நதி அமைப்பு கடந்த பத்தாண்டுகளாக வறட்சி போன்ற நிலைமைகளுக்கு உட்பட்டுள்ளது. குறிப்பாக நீர் நிலைகள் மிகக் குறைந்த மட்டத்திற்குக் குறைந்த பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், நீர் கட்டுப்பாடுகள் செயற்படுத்தப்பட்டன. இந்தநிலையில் சால்மன் மீன் மற்றும் பிற உயிரினங்களைக் வாழ வைக்கும்Read More →

Reading Time: < 1 minuteபிராண்ட்ஃபோர்ட்டில், 2020ஆம் ஆண்டின் முதல் 12 நாட்களில் 17 அளவுக்கு அதிகமான ஒபியாய்ட்டை எடுத்துக் கொண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பிராண்ட்ஃபோர்ட் பொது சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நான்கு அபாயகரமான அளவுகள் அடங்குவதாகவும், இவை அனைத்தும் ஜனவரி 10ஆம் திகதி பிராண்ட்ஃபோர்டில் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சராசரியாக மாதத்திற்கு 13 அதிகப்படியான சம்பவங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக, அதிகப்படியான ஒபியாய்ட் சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteவழக்கமான கறுப்பு கரடி வசந்த வேட்டையை, நடப்பு ஆண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ஒன்றாரியோ மாகாணம் அறிவித்துள்ளது. வருடாந்த மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இதற்கான தீர்மானம் எட்டப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜோன் யாகபுஸ்கி இந்த முன்மொழிவினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். கரடி வேட்டை 1999ஆம் ஆண்டில் மாகாணத்தால் இரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர் 2014ஆம் ஆண்டில், மீண்டும் வசந்த கறுப்பு கரடி வேட்டை பருவம் அறிமுகமானது. கடந்த இரண்டுRead More →

Reading Time: < 1 minuteவன்கூவரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரிச்சர்ட்ஸ் வீதி மற்றும் பசிபிக் பவுல்வர்ட் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:30 மணிக்கு முன்ளதாக இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் 70 வயது மதிக்கதக்க ஆணும் பெண்ணும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர்களைத் மோதிய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தரித்து நின்றதாக தெரிவித்துள்ள பொலிஸார்,Read More →

Reading Time: < 1 minuteஈரானினால் சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக பிரான்சிற்கு அனுப்புமாறு கனடா வலியுறுத்தியுள்ளது. ஒட்டாவா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்த கனேடியர்களின் சடலங்களை கனடாவுக்கு அனுப்புமாறும் அவர் கோரியுள்ளார். மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ள கறுப்புப் பெட்டிகளின் தரவுகளை கண்டறியும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள ஒருசில நாடுகளில் பிரான்சும் ஒன்றாகும் என கனேடிய பிரதமர்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல் ஹைபிரிட் மின்சார படகுகள், விக்டோரியா- ஓக்டன் பாயிண்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இன்று (சனிக்கிழமை) காலை குறித்த படகுகள் கொண்டுவரப்படவுள்ளன. குறித்த படகுகள் ஒவ்வொன்றும் 47 வாகனங்கள் மற்றும் 450 பயணிகளை வைத்திருக்கும் திறன் கொண்டவை ஆகும். குறித்த படகு இயங்குவதற்கு, மின்கலங்களில் சேமிக்கப்படும் மின்சாரத்தை உருவாக்க டீசல் எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது. குறித்த ஹைபிரிட் மின்சார படகுகளின் விலை 86.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துRead More →