Reading Time: < 1 minuteரொறன்ரோ நகரின் மேற்கு முனையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியிருந்த நிலையில், இந்நிலைமை தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதாக ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகின்றது. மாலை 6 மணிக்கு முன்னதாக ஏற்பட்ட இந்த மின் தடையால், ப்ளூர் ஸ்ட்ரீட் மற்றும் குயின்ஸ்வே, கிப்ளிங் அவென்யூ டு விண்டர்மீர் அவென்யூ இடையேயான பகுதிகளில் சுமார் 6,000Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கிங்ஸ்டனுக்கு கிழக்கே 401 ஆவது நெடுஞ்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பல வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். 15 வது நெடுஞ்சாலை மற்றும் மொன்றியல் வீதிக்கு இடையில் பிற்பகல் 2:30 அளவில் நெடுஞ்சாலை 401 இன் மேற்குப் பாதையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 முதல் 40 வாகனங்கள் மற்றும் உழவு இயந்திர டிரெய்லர்கள் மோதிக் கொண்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteரொறெண்றோ பொலிசார் கடந்த மாதம் ஸ்கார்பரோ நகர மையத்தில் இடம்பெற்ற இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி மாலை 6 மணியளவில் ஒரு வர்த்தக வளாக வாகன நிறுத்துமிடத்தில் முதல் சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்களுடன் சிறப்பு அங்காடிக்கு சென்றிருந்த 19 வயதான இளைஞர் ஒருவர் தனது காரில் ஏறுவதற்கு சென்ற போது,Read More →

Reading Time: < 1 minuteமனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ஒன்ராறியோ ஆண்டுக்கு, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்கிறது. இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பினை, ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது முற்றிலும் யாருக்கும் ஏற்படலாம், இவர்கள் எங்கள் குழந்தைகள், அவர்களைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. புதிய மூலோபாயம் வலுவானதாக இருக்கும். தப்பிப்பிழைப்பவர்கள் ஆதரிக்கப்படுவதையும், குற்றவாளிகள் பொறுப்புக்கூறப்படுவதையும் உறுதி செய்வார்கள்” எனRead More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான தனது முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை, ரொறன்ரோ பொலிஸ் சேவை வெளியிட்டுள்ளது இந்த வரவு செலவுத் திட்டமானது, நடப்பு 2019ஆம் ஆண்டை விட 3.9 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட கோரிக்கை மொத்தம் 1.076 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும் என ரொறன்ரோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தங்களில் தேவைகளை நோக்கி செல்லும் எனRead More →

Reading Time: < 1 minuteஅல்பேர்ட்டாவில் ஹெல்த் சர்வீசஸ் (ஏ.எச்.எஸ்)இல் பாரிய ஆட்குறைப்பு நிகழவுள்ளதனை, அல்பேர்ட்டா ஐக்கிய செவிலியர்கள் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 750இற்க்கும் மேற்பட்ட முன்னணி வரிசை செவிலியர்களை ‘அல்பேர்ட்டா ஹெல்த் சர்வீசஸ்’ இழக்கவுள்ளது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், முன்றாண்டுகளுக்கு இந்த ஆட்குறைப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை ஏ.எச்.எஸ்ஸின் முன்னணி பேச்சாளர் ரெய்லீன் ஃபிட்ஸ், அறிவித்ததாக, அல்பேர்ட்டா ஐக்கிய செவிலியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி,Read More →