Reading Time: < 1 minuteகனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஒன்றாரியோ மாநிலங்களில் சுமார் 15 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களை சைபர் தாக்குதலின் மூலம் பறிகொடுத்ததை அடுத்து லைஃப் லாப்ஸ் ஆய்வுகூடம் பாரியளவில் மீட்புத் தொகையை செலுத்தியுள்ளது. கனடாவின் பாரிய வலையமைப்பைக் கொண்ட ஆய்வுகூட பரிசோதனை நிலையம், தனிப்பட்ட தரவு பகிரங்கமாக அம்பலப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. அத்துடன், அதன் கணினி அமைப்புகளில் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கு பின்னர், மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் முக்கியமான தகவல்களை மீட்டெடுக்கRead More →

Reading Time: < 1 minuteதனிப்பட்டவர்களின் நிதியுதவி மூலம் அகதிகளை மீளக்குடியமர்த்தும் வெற்றிகரமான திட்டத்துடன் கனடா ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக சேவை செய்கிறது என்று குடிவரவுத்துறை அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் (யு.என்.எச்.சி.ஆர்) மற்றும் சுவிட்சர்லாந்து அரசினால் ஜெனீவாவில் நடத்தப்பட்ட உலக அகதிகள் மன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே மென்டிசினோ இந்தக் கருத்தை வௌியிட்டுள்ளார். குறித்த நிகழ்வு ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்கள், அகதிகளுக்கான சட்டவல்லுனர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் தலைமைப் பேச்சாளரான கேற் பார்சாஸ் தனது பதவியை விட்டு விலகுவதாகவும், மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சட்யா நரெல்லாவுக்காக பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கேற் பார்சாஸ் நேற்று (செவ்வாய்க்கிழமை) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் இடம்பெற்ற தேர்தலின் பின்னர், ஆளும் லிபரல் கட்சியினர் தமது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழந்தனர். இந்தநிலையில், பிரதமர் ட்ரூடோவின் அலுகவலகத்தை விட்டு வெளியேறிய மூத்த அதிகாரிகளின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், காணாமல் போன 14 வயது பாடசாலை மாணவி தொடர்பில் தகவலறித்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவி, கடந்த வியாழக்கிழமை காலை 131 அவென்யூ மற்றும் 91 தெரு உள்ள கில்லர்னி பாடசாலை வளாகத்தில் வைத்து காணாமல் போனதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இவர் எட்மன்டன் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பில், EPS செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுதாவது, குறித்த 14 வயதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறென்றோபகுதியில் தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொறென்றோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சமூகவலைதளமான டுவிட்டரில் பொலிஸார் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ சக்தி குமாரசாமி (Srisakthi Coomaraswamy) என்ற 53 வயது பெண் கடந்த 15 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 15 ஆம் திகதி மதியம் 12.30 மணிக்கு கடைசியாக Finch Av + Tapscott Rd பகுதியில் காணப்பட்டதாக பொலிஸார்Read More →

Reading Time: 2 minutesகனடாவில் கனடிய தமிழரின் குரல் என தம்மை சொல்லிக்கொள்ளும் ஒரு அமைப்பு, தமிழ் சமூக ஆர்வலரான ஒரு வீடு விற்பனை முகவர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. 2001ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் கனடிய அரசியல் செயல்பாடுகளுக்கென வன்னி தலைமையால் உருவாக்கப்பட்ட அமைப்பே இன்று வழிமாறி, திசைமாறி தான் போனபோக்கில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பு சில வருடங்களிற்கு முன்னர் இலங்கை அரசு சார்ந்த ஒருவருக்கு எதிரான வழக்கில் (CTCRead More →

Reading Time: < 1 minuteஸ்பெயினின் மட்ரிட் நகரில் இடம்பெற்ற காலநிலை மாற்றங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட மந்தமான தீர்மானங்கள் ஏமாற்றமளிப்பதாக கனடாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜொனதன் வில்கின்சன் தெரிவித்துள்ளார். இரண்டு வார COP25 மாநாட்டைத் தொடர்ந்து ஜொனாதன் வில்கின்சன் அதிருப்தி அடைந்த பிரதிநிதிகளின் அணியில் சேர்ந்து கொண்டார். சர்வதேச கார்பன் சந்தைகளுக்கான விதிகள் குறித்த விவாதத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கும் முடிவில் அவரும் அவரது குழுவும் திருப்தியடையவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நள்ளிரவில் தாயும் இரண்டு பிள்ளைகளும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து திடுக்கிடும் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்றாறியோவில் உள்ள இம்பீரியல் அவன்யூ பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பொலிஸாருக்கு சனிக்கிழமை நள்ளிரவு அவசர அழைப்பொன்று கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நிலையில் நின்று கொண்டிருந்த ஒருவரை கண்டனர். அவரை பொலிசார் மீட்ட நிலையில் அங்கு அவரின் மனைவிRead More →

Reading Time: < 1 minuteவர்த்தக சிக்கல்களினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக முறுகல் நிலை காரணமாக விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கனோலா எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.Read More →