Reading Time: < 1 minuteகனடா, பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ஹார்டி துறைமுகத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹார்டிக் துறைமுகத்தின் மேற்கே 188 கிலோமீற்றர் தொலைவிலும் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் ஐந்து இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்க கனடாவின் கூற்றுப்படி, முதல் நிலநடுக்கம் அளவு 5.1, இரண்டாவது 5.6, மூன்றாவது 5.8, நான்காவது 6.0, ஐந்தாவது 4.8 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. ஹார்டிக்கின் மேற்கே 175 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புRead More →

Reading Time: < 1 minuteடர்ஹாம் பிராந்தியத்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒன்றாரியோ- ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மீது, கடத்தல் நோக்கத்திற்காக நான்கு உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, 14.5 கிலோகிராம் ஃபெண்டானைல், 2.8 கிலோகிராம் கோகோயின் மற்றும் 2.5Read More →

Reading Time: < 1 minuteபார்க்டேலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக, ரொறன்ரோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது, சம்பவ இடத்திலிருந்து ஒருவர் தப்பியோடியதாக கூறும் பொலிஸார், அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர். கிங் வீதி மேற்கு மற்றும் ஜேம்சன் அவென்யூவில் உள்ள வளாகத்தில், நேற்று (திங்கட்கிழமை) மதியம் 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர், மருத்துவமனைக்குRead More →

Reading Time: < 1 minuteஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் உயிராபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கம் வீதி மற்றும் புரோகிரஸ் அவென்யூ பகுதியில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்திற்கு அதிவேகமே பயணித்து சாரதி கட்டுப்பாட்டை இழந்ததே காரணம் என பொலிஸாரின் அறிக்கை தெரிவிக்கின்றது.Read More →

Reading Time: < 1 minuteவன்கூவர்- வெஸ்ட் எண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில், பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. பிராட்டன் வீதி மற்றும் பீச் அவென்யூவின் மூலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் இந்த தீவிபத்து சம்பவித்துள்ளது. 10 மாடி உயர குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு தொகுப்பிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், குடியிருப்பின் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாக, வன்கூவர்Read More →

Reading Time: < 1 minuteவன்கூவர் தீவின் மேற்கு கடற்கரையில் விபத்துக்குள்ளான செஸ்னா 172 விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் (சனிக்கிழமை) டோஃபினோ, பி.சி.க்கு புறப்பட்ட விமானம் அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விமானம் விபத்துக்குள்ளானதாக கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விமானத்தின் கலங்கரை விளக்கம் வழியாக விமானத்தின் பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். இதனை கூட்டுRead More →

Reading Time: < 1 minuteசத்திய பிரமாணம் செய்து உறுதி மொழி எடுக்க வேண்டும்… புலம்பெயர்ந்தோர் கனேடிய குடியுரிமை பெற்றுக்கொள்ள முன்னர் அதற்கான சத்தியப்பிரமாணம் செய்து உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டுமென கனடா சமஷ்டி நீதிமன்று ஒன்று தீர்ப்பளித்துள்ளது. கனேடிய குடிமகனாக மாறுவது ஒரு பாக்கியம். புதியவர்கள் கனேடிய குடியுரிமை பெறும்போது நமது அரசியலமைப்பையும் நம் நாட்டின் சட்டதிட்டங்கயையும் பின்பற்றுவோமென உறுதியளிப்பது அவசியம் என நீதிபதி சைமன் நோயல் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 13 ஆண்டுகளாக நிரந்தரRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சமையல்காரராக பணிபுரிந்து வந்தவருக்கு அதிர்ஷ்டலாபத்தில் ஒரு மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ள நிலையில் அவர் சொந்தமாக உணவகம் தொடங்கவுள்ளார். வியட்நாமை சேர்ந்தவர் வின் டிரான் என்பவர் கனடாவின் பிரிற்றிஸ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள உணவகத்தில் வின் டிரான் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். அதிர்ஷட ரிக்கெற்றுகள் வாங்கும் பழக்கம் கொண்ட வின் டிரான் கடந்த மாதம் லோட்டோ 6/49 அதிர்ஷ்டப் போட்டியில் பங்கேற்ற நிலையில் அவருக்கு ஒருRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவின், வெஸ்ரன் வீதி – லோறன்ஸ் அவெனியூ பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள அடுக்குமாடி கட்டத்தின் லிஃப்ட் தளத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணைத் தாக்கிவிட்டு வெஸ்ரன் வீதியின் மேற்குப் பகுதியில் இருந்து 25 வயதுRead More →

Reading Time: < 1 minuteசீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாது என அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய பிரதமர் ஐஸ்டின் ரூடோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். சீன அரசாங்கத்தினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடிய பிரஜைகள் இருவரும் விடுதலை செய்யப்படும் வரை குறித்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என அவர் கோரியுள்ளார். ஹுவாவி நிறுவன தலைமை நிதி அதிகாரியை கனடா கடந்த வருட இறுதியில் கைது செய்தது. இதனை அடுத்து கனேடியRead More →

Reading Time: < 1 minuteமுதலை ஒன்று வீதியினை கடக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மொன்றியால் நகரில் விலங்குகளை காட்சிப்படுத்தும் தனியார் நிறுவனத்தின் வாகனத்தில் இருந்து தப்பித்த முதலை ஒன்று வீதியை கடந்துள்ளது. மெதுவாக சென்ற முதலைக்கு வாகன சாரதிகளும் வாகனங்களின் வேகத்தை குறைத்து வழிவிட்டுள்ளனர். வீதியை கடந்து ஒரு காரின் அடிப்பகுதியில் நுழைந்த முதலை அதன் பின்னர் அங்கிருந்து மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகடுமையான பனிப்பொழிவினால், தென்மேற்கு ஒன்ராறியோ முழுவதும் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சீரற்ற காலநிலையால் வாகன ஓட்டுநர்கள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். லண்டன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஒரு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 25 சென்டிமீட்டர் வரை பனி பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும், லண்டன் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்கு சீக்கிரம் புறப்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.Read More →

Reading Time: < 1 minuteநோர்த் யோர்க் அடுக்குமாடி கட்டடத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பாக, இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் இருவரினதும் ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் கடந்த 11ஆம் திகதி இரவு 8 மணியளவில் லெஸ்லி வீதி மற்றும் பிஞ்ச் அவென்யூ ஈஸ்ட் அருகே உள்ளே குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில்Read More →

Reading Time: < 1 minuteஉலகிலேயே மிகவும் சிறிய வீடு ஒன்றினை கட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ட்ராவிஸ் காசகிராண்டே என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். மனித தலைமுடியை விடவும் சிறிய வீட்டை அவர் இதன்போது கட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீட்டில் கதவுகள், ஜன்னல், நாற்காலிகள், புகைபோக்கி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கனடாவின் தேசியக் கொடியும் பறப்பது போல இந்த வீட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteவுட்ஸ்டாக்கில் ஆயுதமேந்திய வங்கி கொள்ளைக்குப் பிறகு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஸ்பிரிங் பேங்க் அவென்யூவில் உள்ள ஸ்கோடியா வங்கியில் நேற்று (புதன்கிழமை) மாலை 3:15 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றமான நிலை நிலைவியதால், வங்கி மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸின் கூற்றுப்படி, ஆயுதமேந்திய இரண்டு ஆண்கள் வங்கிக்குள் நுழைந்து பணம் கோரியதாகவும், பின்னர் வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும்Read More →

Reading Time: < 1 minuteஸ்கார்பாரோ துப்பாக்கி சூடு தொடர்பான ஆதரங்களை ரொறன்ரோ பொலிஸார் தீவிரமாக திரட்டி வருகின்றனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில், ஸ்கார்பாரோ கோல்ஃப் கிளப் வீதி மற்றும் நெவார்க் வீதி, எல்லெஸ்மியர் வீதியின் தெற்கே காரொன்று மோதப்பட்டிருந்த நிலையில். அதிலிருந்து 30வயது மதிக்க ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,Read More →