Reading Time: < 1 minuteவன்கூவரின் சர்ரே பகுதியில் உள்ள பெரிய வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக சர்ரே தீயணைப்புச் சேவை தெரிவித்துள்ளது. நேற்றுத் திங்கட்கிழமை 9900 தொகுதி- 135 ஏ வீதிப் பகுதிக்கு காலை 10:35 மணிக்கு தீயணைப்பு குழுவினர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்ரே தீயணைப்பு சேவையின் உதவித் தலைவர் டேவிட் பேர்ன்ஸ் கூறுகையில், “நாம் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, கடுமையான தீப்பரவல் இருந்தது. பின்னர்Read More →

Reading Time: < 1 minuteநம் நாட்டில் சாதாரண வீடு ஒன்றின் பெறுமதியில் கனடாவில் குட்டித் தீவு ஒன்றையே கொள்வனவு செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சிறிய அறைகளைக் கொண்ட அடுக்குமாடி வீடுகளுக்கான விலைகளே பல மில்லியன் டொலர் கணக்கில் உள்ளதுடன்  வீட்டு வாடகையும் மிக அதிகமாகும். ஆனால் ஆடம்பர வீடு ஒன்றை கொள்வனவு செய்யும், விலைக்கு, கனடாவில் ஒரு தீவையே கொள்வனவு செய்துவிடலாம். நோவா ஸ்கோஷியா (Nova Scotia) என்னும் மாநிலத்திலுள்ள தீவுகளின்Read More →

Reading Time: < 1 minuteவடக்கு அல்பேர்ட்டாவில் இடம்பெற்ற கோர விபத்தையடுத்து, வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், வீதியில் வாகனத்தை செலுத்துவோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை 2 இற்கு அருகே உள்ள ரேஞ் வீதி – 9 மைல் க்ரீக் பாலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12:30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர். முடிந்தளவு இந்த வீதியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஸ்லேவ் லேக் பொலிஸார்,Read More →

Reading Time: < 1 minuteவன்கூவரில் மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார், தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிரான்வில் வீதிக்கு அருகிலுள்ள நெல்சன் வீதியில் கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்தபோதே, இந்த விபத்து சம்பவித்துள்ளது. வேறு எந்த வாகனங்களும் இந்த விபத்தில், தொடர்பு படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் அதிவேகமாகவே பயணித்ததே, இவ்விபத்துக்கு காரணம் என உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து படுகாயங்களுடன் குறித்த நபர் மீட்கப்பட்ட போதும், அவர்Read More →

Reading Time: < 1 minuteசீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் அறிமுகப்படுத்தும் 5-ஜி தொழில்நுட்பம் குறித்து கனடாவை அவதானமாக இருக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. குறித்த தொழில்நுட்பம் கனடாவின் புலனாய்வுத் துறைசார் தரவுகளை சேகரிக்கும் வழிவகைகளை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் அமெரிக்காவின் மூத்த சட்டவாளர்கள் நேற்று (சனிக்கிழமை) சர்வதேச பாதுகாப்பு சபையில் எச்சரித்தனர். லிபரல் அரசாங்கம்,  வரவிருக்கும் 5-ஜி வலையமைப்பை உருவாக்க உதவுவதில் இருந்து ஹவாய்  நிறுவனத்தை தடைRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திடமிருந்து லிபரல் அரசாங்கம் புதிய அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இதன்படி, நேட்டோ மாநாட்டில் உறுதிப்படுத்தப்பட்டவாறு பாதுகாப்பு செலவீனங்களை கனடா அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ரொபேர்ட் ஓ பிரெய்ன், “கனடா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதம் அளவில் இராணுவ வரவு செலவுத் திட்டங்களை ஒதுக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார் ஹொலிஃபக்ஸ் சர்வதேச பாதுகாப்புRead More →

Reading Time: < 1 minuteஸ்கார்பரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஸ்கார்பரோவில் உள்ள மதுக்கடை ஒன்றுக்கு வெளியே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. லோரன்ஸ் அவென்யூ மற்றும் ஸ்கார்பரோ கோல்ஃப் கிளப் சாலை பகுதியில் உள்ள ஒரு மதுக்கடைக்கு வெளியே சந்தேகநபர்கள் ஒருவரை இலக்குவைத்து இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பானRead More →

Reading Time: < 1 minuteகாணாமல் போயுள்ள தாயையும் மகனையும் கண்டுபிடிக்க உதவுமாறு, வின்னிபெக் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 34 வயதான மேகன் மில்ஸ் என்ற தாயும், தனது ஆறு மாத மகனுடன் காணமல்போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த தாய் இறுதியாக, கடந்த புதன்கிழமை மாலை வின்னிபெக்கின் வெஸ்ட் எண்ட் பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், ஐந்து அடி ஆறு அங்குலம், சராசரியான உடல் தோற்றம். இளஞ்சிவப்பு, அலை அலையான கூந்தல் மற்றும் சிலRead More →