Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுக்களின் புதிய தலைவர்களை ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபேர்ட் அமைச்சரவை தேர்வு செய்துள்ளது. சுயாதீன பொலிஸ் மீளாய்வு இயக்குநரின் அலுவலகத்தை மூத்த வழக்கறிஞரான ஸ்டீபன் லீச், தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், ஈராக், ஜோர்ஜியா மற்றும் ரியூனிசியா போன்ற நாடுகளில் ஆளுகை கட்டிடம், நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் பணியாற்றியவர் ஆவார். பொலிஸாருக்கெதிரான பொது முறைப்பாடுகளைRead More →

Reading Time: < 1 minuteதாயகத்திலும், மேற்குலக நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரொறன்ரோவில் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. இதில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் திருவுருப்படங்களுக்கு செங்காந்தள் மலர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இவ் அஞ்சலி நிகழ்வில் பெருமளவிலான மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சிறுவயது முதல் வசித்து வந்த பிரபல நடிகரும், மொடலுமான கோட்பிரி காவோ (Godfrey Gao) 35 வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். தைவானில் பிறந்த Godfrey Gao இளம் வயதிலேயே கனடாவின் வான்கூவருக்கு பெற்றோருடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார். கனடாவிலுள்ள கபிலனோ பல்கலைக்கழகத்தில் தனது மேற்கல்வியை நிறைவு செய்து கொண்ட Godfrey Gao பின்னர் மொடலிங் துறை மற்றும் சினிமா துறையில் நுழைந்து பிரபல நடிகராக மாறினார். இந்தநிலையில்Read More →

Reading Time: < 1 minuteமாணவர்கள் மீது மனிதக் கழிவை வீசியதாக தெரிவிக்கப்படும் ஒருவரை ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் கடந்த வெள்ளி மற்றும் திங்கட் கிழமைகளில் நடைபெற்ற மூன்று தனித்தனியான சம்பவங்களில் திரவ மனிதக் கழிவை மாணவர்கள் மீது எறிந்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ரொறன்ரோவைச் சேர்ந்த சாமுவேல் ஓபோகு என்ற குறித்த சந்தேகநபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் குயின் ஸ்ட்ரீற் வெஸ்ற் பகுதியில் வைத்து கைதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிசிசாகா பகுதியில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞன் மீது  பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து, படுகாயமடைந்த இளைஞனை பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவமனையில் அனுமதித்தனர். டன்ராஸ் வீதி மற்றும் ஹைன்ஸ் சாலைக்கு அருகிலுள்ள மிசிசாகா சைனீஸ் சென்ரர் பிளாசாவில் உள்ள வங்கியில் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டார். இதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பீல் பிராந்திய பொலிஸார் சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவை சேர்ந்த பெண்ணொருவரிடம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்த மீது 20 பக்கங்கள் கொண்ட முறைப்பாட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாரா ஸ்டெப்னீ லாண்ட்ரே என்ற குறித்த பெண், நித்யானந்தா ஆசிரமத்தில் நிர்வாகியாக செயற்பட்டதுடன், இவர் வெளிநாடுகளின் போதனைகளுக்கு செல்லும் நித்யானந்தாவின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டார். இதனால் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஆன்மிகத்தில் ஈடுபட்டார். இந்து மதத்தின் மீதான ஈர்ப்பால் 2015-ஆம் ஆண்டு பிடதி ஆசிரமத்திற்கு வந்தRead More →

Reading Time: < 1 minuteடொரோண்டோவில் தமது தொடரூந்து நிலையங்களில், டிக்கட்டுகள், டோக்கன்கள், மாதாந்த அட்டைகள் போன்றவற்றின் விற்பனைகள் அனைத்தும் இந்த மாதத்துடன் நிறுத்தப்படுமென, TTC அறிவித்துள்ளது. எனினும், TTC அல்லாத விற்பனை நிலையங்களில், அவை தொடர்ந்தும் விற்கப்படும். முழுமையாக PRESTO அட்டைகளின் பாவனையை அமுல்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், டிக்கட்டுகள், டோக்கன்கள் போன்றவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இறுதி நாள் எதுவும் இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் TTC தெரிவித்துள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகல்கரியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய, சந்தேக நபர் தொடர்பான வரைபடமொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அத்தோடு, இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். 20 வயதுக்கு இடைப்பட்டவராக கருதப்படும் இந்த சந்தேகநபர், கருப்பு அடத்தியான முடி, சுமார் ஐந்து அடி ஒன்பது அங்குலம் உயரம் கொண்டவரெனவும் எயார் ட்ரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். எயார் ட்ரை பொலிஸாரின் பொது விசாரணை சேவைகள் மற்றும் குற்றக்Read More →