Reading Time: < 1 minuteஇந்த ஆண்டிற்கான கௌரவம் மிக்க புக்கர் (Booker) விருதினைப் பெற்றுக்கொள்பவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த 79 வயதான பெண் எழுத்தாளர் மார்க்கரெட் அற்வூட் (Margaret Atwood) பிரித்தானியாவைச் சேர்ந்த 60 வயதான பெண் எழுத்தாளர் பேர்னர்டீன் எவரிஸ்ரோ (Bernardine Evaristo) ஆகிய இருவரே இந்த விருதினை பெற்றுக்கொள்ளவுள்ளனர். கடந்த 1992ஆம் ஆண்டில்தான் இருவருக்கு புக்கர் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒருவருக்குத்தான் விருது என விதிமுறை வகுக்கப்பட்டது.Read More →

Reading Time: 2 minutesதியடோர் அன்ரனி (Theodore Antony)அவர்கள் யாழ் மண்ணை பிறப்பிடமாக கொண்டு 1970 களின் நடுப்பகுதியில் உயிரியல் ஆய்வில் பட்ட படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்டு 15 வருடகாலம் அங்கு வாழ்ந்த இவர். அமெரிக்காவில் வணிக மேலாண்மை பட்ட படிப்பை முடித்துக் கொண்டு கனடாவிற்க்கு 1989 ல் குடி பெயர்ந்தார். கனடிய மண்ணில் புலமைப்பரிசில் திட்ட முகாமையாளராகி பல்லின மக்களை உள்ளடக்கிய முகவர் நிறுவனத்தை வெற்றிகரமாக நடாத்தியவர் திரு தியடோர் அன்ரனி அவர்கள்.Read More →

Reading Time: < 1 minuteமிசிசாகா பகுதியில் நெடுஞ்சாலை 401இல் பல வாகனங்கள் தொடர்புபட்ட விபத்தில் படுகாமடைந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுமியும், ஆபத்து குறைவான காயங்களுக்கு உள்ளான மேலும் சிலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், வின்ஸ்டன் சேர்ச்சில் பவுல்வர்ட் பகுதியில், நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்தRead More →

Reading Time: < 1 minuteஈட்டோபிக்கோ பகுதியில் வைத்து 28 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விபரம் வெளியிட்டுள்ள பொலிஸார், சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும், ஒன்றுக்கு மேற்பட்டோர் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டிருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதாகவும், அவர்கள் அனைவரும் ஒரு வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவேRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க வான்பரப்பில் வைத்து கனேடிய விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் விமானம் ஒன்று எரிந்து வீழந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கனேடிய அரச விமானப் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஜோர்ஜியாவின் ஹம்ப்டன் பகுதியில் நடைபெற்ற வான் சாகச நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த தமது விமானம் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வீழந்து நொருங்கியதாகவும், எனினும் அதன் விமானி விமானம் வீழ்வதற்கு முன்னரே பாதுகாப்பாகRead More →

Reading Time: < 1 minuteஇன்று காலை ஸ்காபரோவில் நடந்து சென்ற ஒரே குடுத்பத்தைச் சேர்ந்த ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட மூவர் மீது வாகனம் ஒன்று மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் மூவரைத் தேடி வருவதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எல்ஸ்மெயர் வீதி மற்றும் ஃபார்மசி அவனியூ பகுதியில் இன்று முற்பல் 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் விபரித்துள்ள காவல்துறையினர், எல்ஸ்மெயர் வீதியில் கிழக்கு நோக்கிப்Read More →

Reading Time: < 1 minuteவோன் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதுண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிங்க் வோன் வீதி மற்றும் Pine Valley Drive பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2:45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இடத்தில் வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்ததாகவும், சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் காயங்களுடன் வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் யோர்க் பிராந்தியRead More →

Reading Time: < 1 minuteஓக்வுட் – வோன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு பெண்கள் மவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓக்வுட் அவனியு மற்றும் வோன் வீதிப் பகுதியில் உள்ள மதுபாண விடுதி ஒன்றுக்கு வெளியே, நேற்று அதிகாலை 2:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதனை ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓக்வுட் அவனியுவில் உள்ள “Greens Bar and Restaurant” எனப்படும் அந்த மதுபான விடுதிக்கு வெளியே உள்ள வீதியோர நடைபாதையில் நின்றுRead More →

Reading Time: < 1 minuteமனிட்டோபாவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் தொடர்வதுடன், அதனால் அங்குள்ள பல பிராந்தியங்களில் மின் வினியோகமும் தடைப்பட்டுள்ள நிலையில், மாநிலம் தழுவிய அவசரகால நிலையினை அறிவிக்கப்போவதாக மனிட்டோபா முதல்வர் தெரிவித்துள்ளார். மனிட்டோபா மின் வாரியம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து, இன்று ஊடக மாநாடு ஒன்றினைக் கூட்டிய முதல்வர் பிரையன் பளிஸ்ட்டர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். வினிப்பெக் போன்ற பகுதிகளில் பனிப் புயலின் வேகம் தணிந்துள்ள போதிலும், இன்றைய நிலவரப்படி ஆயிரக்கணக்கானோர் மின் வினியோகம்Read More →