Reading Time: < 1 minuteகனடாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் நிலவரங்களின் அடிப்படையில் அரசியல் தரப்பில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விஞ்ஞானியான ஸ்ட்ஃபன் ரொம்லிம் (Stephen-Tomblin) விமர்சனம் வௌியிட்டுள்ளார். நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் ​லெப்ரடோர் பிராந்திய பெறுபேறுகள் பெரிதும் ஆச்சரியமளிக்கவில்லை, சிதறிய அரசியல் கட்சிகளின் நிறங்கள் கனடாவின் பயணத்தில் குடிமக்களிடையேயான ஒற்றுமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கனடா நேற்று இருந்ததை விட இன்று பிளவுபட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. இதனை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்கள், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பரபரப்பாக வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகின்றனர். இந்தநிலையில், இந்திய பிரதமரும் தனது பங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், தனது டுவிட்டர் பதிவிலும் அதனை சுட்டிக்காட்டியுள்ளார். தனது டுவிட் பதிவில், “ஜனநாயகத்தின் மீதான அர்ப்பணிப்பு, கௌரவங்கள் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவைகளால் இந்தியாவும்,Read More →

Reading Time: < 1 minuteதேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதமர் ஜஸ்டின் ரூடோ மொன்றியலில் தனது தேர்தல் தொகுதியில் உள்ள தொடரூந்து நிலையத்தில் இன்று காலை வேளையிலேயே காத்திருந்து, அந்த நிலையம் ஊடாக பயணிக்கும் மக்களிடம் நன்றி தெரிவித்துள்ளார். அங்கு வந்த மக்களுக்கு கைலாகு கொடுத்து அவர்களிடம் நன்றி தெரிவித்த வேளையில், மக்களில் பலரும் அவர் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து, அவருடன் நின்று படம் எடுத்துக் கொண்டனர். கடந்தRead More →

Reading Time: < 1 minuteபொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ருவிற்றர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அற்புதமான மற்றும் கடினமான போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த வெற்றிக்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளையும் முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுவரை வெளியான தேர்தல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 62.3 வீத வாக்குகளுடன் அமோக வெற்றிபெற்றுள்ளார். 2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியிலேயே லிபரல் கட்சி சார்பில் மீண்டும் ஹரி ஆனந்தசங்கரி போட்டியிட்ட அவர் 21 ஆயிரத்து 241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேற்றிவ் கட்சியின் பொப்பி சிங் 20.1 வீத வாக்குகளையேRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பொதுத்தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, இரண்டாவது தடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ சிறுபான்மை ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்க்கப்படுகிறார். இருப்பினும், ஆளும் லிபரல் கட்சிக்கு எதிராக அரசியல் செய்துவரும், வலதுசாரி சிந்தனையுடைய பழமைவாத கட்சிக்கு, முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் எயார் கனடா விமான சேவை பாலின ரீதியான மதிப்பளித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு திட்டமிடலை மேற்கொண்டுள்ளது. இதன்படி பயணிகளை வரவேற்கும் போது பாலின குறிப்புகளை கூறி வரவேற்பதை கைவிட எயார் கனடா திட்டமிட்டுள்ளது. அதாவது ‘பெண்கள் மற்றும் தாய்மார்களே’ என்று வரவேற்பதை நிறுத்தி பொதுவான வரவேற்பை வழங்கவுள்ளனர். திருநங்கைகள் குறித்து அக்கறை கொண்டுள்ள அவர்கள், ஆண் அல்லது பெண் என்று அடையாளத்தை விழிப்பூட்டும் சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்கவுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் உலுக்கிய இரட்டைக் கொலை வழக்கில் சந்தேகநபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த சந்தேகநபர் முன்னாள் மனைவியை கொடூரமாக கொலை செய்ததுடன், தப்பித்துச் செல்லும் நோக்கில் மூதாட்டி ஒருவரையும் கொலை செய்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி 41 வயதான Veronique Barbe என்பவரின் சடலம் அவரது குடும்ப இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடலில் மொத்தம் 17 கத்திக் குத்து காயங்கள்Read More →

Reading Time: < 1 minuteநெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாதசாரி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். புதன்கிழமை இரவு 8:30 அளவில், நெடுஞ்சாலை 401இல், Woodstockற்கு கிழக்கே இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்தப் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு அதற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, நெடுஞ்சாலையில் கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிறிதொரு வாகனம் அவர் மீது மேதிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. உயிராபத்தான நிலையில்Read More →