Reading Time: < 1 minuteஇந்தியாவின் இமயமலைப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு சென்றிருந்த ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரும் ஆராய்சியாளருமான பீட்டர் விட்டெக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,700 மீட்டர் உயரமான அந்த மலை முகட்டுப் பகுதிக்கு ஆறு பேராக இவர்கள் சென்ற நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், அதன்போது அவர்களில் ஐந்து பேர் ஒருவாறு தப்பித்துக் கொண்டதாகவும், பீட்டரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கேRead More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு ஜேன் மற்றும் ஃபின்ச் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். Finch Avenue Westற்கு தெற்கே, Jane Street மற்றும் Grandravine Drive பகுதியில் அமைந்துள்ள நகரான்மைக் குடியிருப்புக் கட்டிடத்திற்கு வெளியே, நேற்று இரவு 9:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், உயிராபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,Read More →

Reading Time: < 1 minuteஇன்று காலை நெடுஞ்சாலை 406இல், St. Catharines பகுதியில் வாகனம் ஒன்று தவறான வழித்தடத்தில் பயணித்ததில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் நெடுஞ்சாலையின் Glendale Avenue பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. வடக்கு நோக்கி பயணிக்க வேண்டிய வழித்தடத்தில் வாகனம் ஒன்று தெற்கு நோக்கிச் சென்றதாகவும், எதிரே வந்த பிறிதொரு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த கோர விபத்து சம்பவித்ததாகவும் ஒன்ராறியோ மாகாணRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல நடிகரும், இசைக்கலைஞருமான லூயீ ரன்கின் (Louie Rankin) உயிரிழந்தார். நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிரில் வந்த பாரவூர்தியொன்றுடன் மோதியே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் லூயீயின் கார் முற்றாக சேதமடைந்துள்ளது. அவரின் மறைவுக்கு துறை சார்ந்த நண்பர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 66 வயதான லூயீ ரன்கின் கடந்தRead More →

Reading Time: < 1 minuteஇந்திய திரைப்பட நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கனடா வாழ் தமிழர் ஒருவர் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘டிராபிக் ராமசாமி’ திரைப்படத்திற்காக தான் வழங்கிய இந்திய ரூபாய் 21 லட்சத்தை மோசடி செய்ததாகவும், பணத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மீள வழங்க மறுப்பதாகவும் கனடா வாழ் தமிழர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். அதேவேளை, பணத்தை மீள வழங்குமாறு தான் விடுத்த கோரிக்கைகளை மறுப்பதுடன், அச்சுறுத்தல் விடுப்பதாகவும்Read More →

Reading Time: < 1 minuteதிருடப்பட்ட கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதனை செலுத்திச் சென்ற 31 வயது ஆண் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் மிசிசாகாவில் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 1:30 அளவில், Mclaughlin Road மற்றும் Avonwick Avenue பகுதியில் வாகனம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்துவிட்டதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரு வாகனம் மட்டும் தொடர்புபட்ட இந்த விபத்தில்,Read More →

Reading Time: < 1 minuteமிசிசாகாவில் வாகனத்தினால் மோதுண்ட ஆண் பாதசாரி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எக்ளிங்டன் அவனியூவுக்கு வடக்கே, Scollard Court Avenue மற்றும் Heatherleigh Avenue பகுதியில் நேற்று இரவு 8:20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ஆண் பாரதூரமான காயங்களுடன் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதனை பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும், குறித்த அந்தப்Read More →

Reading Time: < 1 minuteநேற்று பிற்பகல் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Yonge Street மற்றும் Pleasant Avenue பகுதியில், நேற்று பிற்பகல் 2:10 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஆண் சந்தேக நபர் ஒருவர் கால்நடையாகத் தப்பியோடிச் சென்றதாகவும், எனினும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கத்திக்Read More →

Reading Time: < 1 minuteகல்கரியில் 2019ஆம் ஆண்டின் முதல் பாதியில், அதிகமான இறப்புக்கள் ஃபெண்டானைல் போதை மருந்தினாலே சம்பவித்துள்ளதாக, ஆல்பர்ட்டாவின் ஓபியாய்ட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கல்கரியில் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 116 ஃபெண்டானில் தொடர்பான இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக குறித்த அறிக்கை தெரிவிக்கின்றது. எட்மண்டனில் 80 பேர் இறந்துள்ளதாகவும், கிராண்டே ப்ரேரியில் 19 பேர் உயரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லெத் பிரிஜ்சில் ஃபெண்டானில் தொடர்பான 11 தற்செயலான மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteதுப்பாக்கி வன்முறையை தடுக்கும் பொலிஸாரின் முயற்சியில், 500 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாக ரொறான்ரோ பொலிஸ்துறை தலைவர் மார்க் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று மாத திட்டத்தின் பாதி கட்டத்தில் குறித்த குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும், இதன்போது, 200 கைது சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர நகரம் முழுவதும் இடம்பெற்ற 14 தனி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 17பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகிRead More →