Reading Time: < 1 minuteகனடாவில் எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், லிபரல் கட்சி மற்றும் கொன்சவேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் பெரும் போட்டி நிலவும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், தேர்தல் பிரசார பணிகளை ஆரம்பித்துள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகளை கவரும் நோக்கில் பல சலுகைகளை வழங்கவுள்ளதாக வாக்குறுதியளித்துள்ளார். ஒன்ராறியோவில் தனது தேர்தல் பிரசார பணிகளை அண்மையில்Read More →

Reading Time: < 1 minuteபெரும்பான்மையான கனேடியர்கள் ஒரு தேசிய மருந்தக திட்டத்தையே ஆதரிக்கின்றார்கள் என்று ஹார்ட் அண்ட் ஸ்ட்ரோக் மற்றும் கனேடிய தாதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மேற்கொண்ட புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 90 வீதமான கனேடிய பிரஜைகள், தேசிய மருந்தக திட்டம் இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளதுடன், இது அனைவருக்கும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு சமமான அணுகலை வழங்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “கனேடியர்களுக்கு இது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” எனRead More →

Reading Time: < 1 minuteகனேடிய எரிசக்தி துறையில் அங்கம் வகிக்கும் எட்டு நிறுவனங்கள் நேற்று (திங்கட்கிழமை) S&P/TSX கூட்டு அட்டவணையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. அவற்றின் சந்தை மூலதனம் குறைந்தபட்ச தேவைகளை விட குறைந்துவிட்டமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் எரிபொருள் மற்றும் எரிவாயு துறை எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் சமீபத்திய அறிகுறியாகும். கனடாவின் முதன்மைக் குறியீட்டின் மறுசீரமைப்பு, புதிய எண்ணெய் குழாய் திறன் இன்மை மற்றும் மலிவான வட அமெரிக்க இயற்கை எரிவாயுவின் பற்றாக்குறைRead More →

Reading Time: < 1 minuteகடந்த வெள்ளிக்கிழமை நயாகரா ஆற்றில் வைத்து காணமல் போன 28 வயது ஆண் ஒருவர், ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நயாகரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நயாகரா ஆற்றின் Jarvis Street மறறும் Niagara Boulevard பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6:30 அளவில் மூவர் தத்தளிப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்தபோது, அங்கே இருந்த வழிப்போக்கர் ஒருவர் ஆற்றிலிருந்து 29 வயதுப் பெண் ஒருவரை மீட்ட நிலையில், அந்தப்Read More →

Reading Time: < 1 minuteகனடா மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற துணை ஆளுநர் லின் பேட்டர்சனுக்குப் (Lynn Patterson) பதிலாக, நிதிச் சந்தைத் துறையின் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய டோனி கிராவெல் நியமிக்கப்பட்டுள்ளார். வட்டி வீத தீர்மானங்களை மேற்கொள்ளும் நிர்வாக குழுவில் கிராவெல் இணைந்து வங்கியின் நிதி அமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கான பொறுப்பை துணை ஆளுநர் போல் பியூட்ரியுடன் பகிர்ந்து கொள்வார் என்று கனடா மத்திய வங்கி கடந்த வாரம் வௌியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteதனது தாராளவாதிகள் (லிபரல் கட்சியினர்) அடுத்தமாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொலைபேசி கட்டணங்களை 25% குறைப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதியளித்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் தனது ஆதரவாளர்களிடம் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். இதன்போது, முக்கிய சேவை வழங்குநர்களை அவர் கட்டாயப்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னதாக செலவினங்கள் என்பதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் போதைப்பொருளுக்கு அடிமையாவதில் இருந்து மீண்டெழுவதற்கான திட்டம் வைத்திருப்பதாக பசுமைக் கட்சியின் தலைவர் எலிசபெத் மே தெரிவித்துள்ளார். வின்னிபெக்கில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பிரச்சார கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை கூறினார். இதன்போது போதைக்கு அடிமையாவதை ஒரு குற்றவியல் பிரச்சினையாக கருதுவதை நாம் நிறுத்த வேண்டும் எனவும் இது ஒரு தேசிய சுகாதார அவசரநிலை என்றும் கூறினார். போதைப் பொருள் பழக்கத்தால் அதிகப்படியான இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான முயற்சியின் ஒருRead More →

Reading Time: < 1 minuteகனடா முழுவதிலும் உள்ள தேனீக்கள் ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து இறந்து வருவதால், யோர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த பிரச்சினைக்கான தீர்வு பூச்சிகளின் டி.என்.ஏ.வில் மறைந்திருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். வரும் ஒக்டோபரில், தேனீ வளர்ப்பவர்களுக்கு நோய்வாய்ப்பட்ட தேனீக்களைக் கண்டறிய உதவும் வகையில் ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை யோர்க் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கவுள்ளது. கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத் தொழில்களை பேரழிவிற்குRead More →

Reading Time: < 1 minuteஅதிர்ஷ்டத்தில் 10 மில்லியன் டொலரை அள்ளிய கனேடியர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். கனடாவின் ரொறன்ரோ பகுதியில் குடியிருந்து வந்த (41வயது) மைக்கேல் கெப்ரு என்பவரே எத்தியோப்பியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இவர் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் 10 மில்லியன் டொலர் தொகையை வென்றதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வேலையியிலிருந்து விலகி பிறந்த நாடான எத்தியோப்பியாவுக்கு சென்றுள்ளார். தான் பிறந்த நாட்டுக்கு தன்னால்Read More →