Reading Time: < 1 minuteகடந்த வெள்ளிக்கிழமை நயாகரா ஆற்றில் வைத்து காணமல் போன 28 வயது ஆண் ஒருவர், ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நயாகரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நயாகரா ஆற்றின் Jarvis Street மறறும் Niagara Boulevard பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6:30 அளவில் மூவர் தத்தளிப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்தபோது, அங்கே இருந்த வழிப்போக்கர் ஒருவர் ஆற்றிலிருந்து 29 வயதுப் பெண் ஒருவரை மீட்ட நிலையில், அந்தப்Read More →

Reading Time: < 1 minuteகனடா மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற துணை ஆளுநர் லின் பேட்டர்சனுக்குப் (Lynn Patterson) பதிலாக, நிதிச் சந்தைத் துறையின் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய டோனி கிராவெல் நியமிக்கப்பட்டுள்ளார். வட்டி வீத தீர்மானங்களை மேற்கொள்ளும் நிர்வாக குழுவில் கிராவெல் இணைந்து வங்கியின் நிதி அமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கான பொறுப்பை துணை ஆளுநர் போல் பியூட்ரியுடன் பகிர்ந்து கொள்வார் என்று கனடா மத்திய வங்கி கடந்த வாரம் வௌியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteதனது தாராளவாதிகள் (லிபரல் கட்சியினர்) அடுத்தமாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொலைபேசி கட்டணங்களை 25% குறைப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதியளித்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் தனது ஆதரவாளர்களிடம் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். இதன்போது, முக்கிய சேவை வழங்குநர்களை அவர் கட்டாயப்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னதாக செலவினங்கள் என்பதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் போதைப்பொருளுக்கு அடிமையாவதில் இருந்து மீண்டெழுவதற்கான திட்டம் வைத்திருப்பதாக பசுமைக் கட்சியின் தலைவர் எலிசபெத் மே தெரிவித்துள்ளார். வின்னிபெக்கில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பிரச்சார கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை கூறினார். இதன்போது போதைக்கு அடிமையாவதை ஒரு குற்றவியல் பிரச்சினையாக கருதுவதை நாம் நிறுத்த வேண்டும் எனவும் இது ஒரு தேசிய சுகாதார அவசரநிலை என்றும் கூறினார். போதைப் பொருள் பழக்கத்தால் அதிகப்படியான இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான முயற்சியின் ஒருRead More →

Reading Time: < 1 minuteகனடா முழுவதிலும் உள்ள தேனீக்கள் ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து இறந்து வருவதால், யோர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த பிரச்சினைக்கான தீர்வு பூச்சிகளின் டி.என்.ஏ.வில் மறைந்திருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். வரும் ஒக்டோபரில், தேனீ வளர்ப்பவர்களுக்கு நோய்வாய்ப்பட்ட தேனீக்களைக் கண்டறிய உதவும் வகையில் ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை யோர்க் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கவுள்ளது. கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத் தொழில்களை பேரழிவிற்குRead More →

Reading Time: < 1 minuteஅதிர்ஷ்டத்தில் 10 மில்லியன் டொலரை அள்ளிய கனேடியர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். கனடாவின் ரொறன்ரோ பகுதியில் குடியிருந்து வந்த (41வயது) மைக்கேல் கெப்ரு என்பவரே எத்தியோப்பியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இவர் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் 10 மில்லியன் டொலர் தொகையை வென்றதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வேலையியிலிருந்து விலகி பிறந்த நாடான எத்தியோப்பியாவுக்கு சென்றுள்ளார். தான் பிறந்த நாட்டுக்கு தன்னால்Read More →

Reading Time: < 1 minuteபாடசாலை காலங்களில் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் சிறுவர்களைப் பராமரிப்பதற்கான வசதியை ஏற்படுத்தவுள்ளதாக சமஷ்டி லிபரல் கட்சி அறிவித்துள்ளது. பள்ளிக்கூடம் ஆரம்பமாவதற்கு முன்பாகவும், முடிவடைந்த பின்னரும் சிறுவர்களைப் பராமரிக்கும் விதமாக இந்த வசதியை ஏற்படுத்தவுள்ளதாக சமஷ்டி லிபரல் கட்சியின் தலைவரான பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். வோட்டர்லூவில் நடைபெற்ற பிரசாரத்தின் போது இது குறித்த அறிவிப்பை ட்ரூடோ வெளியிட்டார். இதற்கு வருடமொன்றுக்கு 535 மில்லியன் டொலர் செலவாகும். வரும் ஒக்டோபர் 21Read More →

Reading Time: < 1 minuteகனடாவின், கலெடனில் டிரக் வாகனம், பல கார்களில் மோதிய பின்னர் ஒரு கட்டடத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். டிரக் வாகனம் சமிக்ஞை விளக்கு கம்பங்களையும் மோதிக் கொண்டு அங்கு நின்ற கார்கள் மீதும் மோதி இறுதியில் அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் மோதியுள்ளது. இதையடுத்து குறித்த டிரக் வாகனத்தின் சாரதி தீயணைப்பு படையினரால் வாகனத்திலிருந்து வெளியேற்றப்பட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடா, ரொறன்ரோவில் உள்ள ஈட்டன் சென்ரரில் இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு 11:30 மணிக்குப் பின்னர் வாகனத்தில் வந்த ஒருவர் ஈட்டன் சென்ரர் வடகிழக்கு மூலையை அணுகி H&M கடைக்கு அருகே பல முறை துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்குRead More →

Reading Time: < 1 minuteஸ்காபரோ றீஜென்ட் பார்க் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒருவர் பலியானதாகவும், மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு பத்து மணியளவில், Middlefield Road மற்றும் McNicoll Avenue பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, அங்கே ஆண் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் காணப்பட்டுள்ளார். குறித்த அந்தRead More →

Reading Time: < 1 minuteபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருப்பு நிற ஒப்பனை ஒளிப்படமொன்று வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து அவர் இதற்காக மனம்வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படம், பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் வெளியாகியிருப்பது ஜஸ்டின் ட்ரூடோவின், முன்னகர்வுக்கு தடையாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில், இதற்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் எனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான வாய்ப்பை உருவாக்கவும்,Read More →

Reading Time: < 1 minuteCherry Beach பகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டு வெவ்வேறு பாலியல் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். அண்மைய சம்பவம் கடந்த 15ஆம் திகதி Cherry Beachற்கும் Regatta Roadற்கும் இடைப்பட்ட பகுதியில், Martin Goodman Trailஇல் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்தப் பகுதியில் அதிகாலை நான்கு மணிக்கும் ஐந்து மணிக்கும் இடையே நடந்து சென்றுகொண்டிருந்த பெண்மீது , இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் தாக்குதல்Read More →

Reading Time: < 1 minuteஹமில்டனின் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Reid Avenue பகுதியில் நேற்று இரவு 6:15 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அங்கே ஆண் ஒருவர் மிக மோசமான காயங்களுடன் காணப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து இருவர்Read More →