Reading Time: < 1 minuteகியூபெக்கில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கியூபெக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வீடொன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்தநிலையில் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரீவியின் உதவியுடன் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் 10 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். குறித்த சம்பவம் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.Read More →