Reading Time: < 1 minuteஉலகின் பிரபல நகரங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வினை மேற்கொண்ட நிறுவனம் ஒன்று, உலகின் பாதுகாப்பான நகரங்களில் ரொரன்ரோ 6ஆவது இடத்தில் உள்ளதாகவும், வட அமெரிக்காவில் மிகவும் பாதுகாப்பான நகரம் ரொரன்ரொ என்றும் தெரிவித்துள்ளது. “த எக்கொனோமிஸ்ட்” ஊடக நிறுவனத்தின் புலனாய்வுப் பிரிவு, உலகின் பிரபலமான 60 நகரங்களிடையே இந்த ஆய்வினை மேற்கொண்டு, இநத ஆண்டுக்கான பாதுகாப்பு குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் பாதுகாப்பு, உட்காட்டுமானம், சுகாதாரம் மற்றும் தனியாள் பாதுகாப்புRead More →

Reading Time: < 1 minuteபெண் ஒருவர் வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு பலியான சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு வேளையில் ஸ்காபரோ பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 10:25 அளவில், Sheppard Avenue மற்றும் Pharmacy Avenue பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. வீதியைக் கடந்துகொண்டிருந்த 35 வயதுப் பெண் மீது, கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்று மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. மோதப்பட்ட பெண் கடுமையான காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகRead More →

Reading Time: < 1 minuteமிசிசாகாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த 28 வயது ஆண் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Britannia Road மற்றும் Hurontario Street பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த விடுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவ இடத்திலிருந்து சந்தேக நபர் கால்நடையாகவேRead More →

Reading Time: < 1 minuteகியூபெக்கில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கியூபெக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வீடொன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்தநிலையில் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரீவியின் உதவியுடன் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் 10 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். குறித்த சம்பவம் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.Read More →