Reading Time: < 1 minuteகனடாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய எஸ்.என்.சி. லவாலின் என்ற கட்டுமான துறை நிறுவனத்திற்கு சார்பான நிலைப்பாட்டை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக எஸ்.என்.சி லவாலின் நிறுவனம் திகழ்கின்றது. இந்த நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கனடா மக்கள் பணிபுரிந்து வருகிறார்கள். எஸ்.என்.சி. லவாலின் நிறுவனம் லிபியாவில் ஒரு கட்டுமான ஒப்பந்தத்தைப் பெற அந்த நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறொன்ரோவில் பத்து வயதுச் சிறுமி ஒருவர் காணாமல் போனதாக பொலிஸார் அறிவித்திருந்த நிலையில் அவர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ரொறொன்ரோ பொலிஸார் கடந்த 17 ஆம் திகதி ருவிற்றரில் வெளியிட்ட பதிவில் ஜிசெல் பன்ஷன் லொய்ஷா (Jiselle Banchon-Loayza) என்ற பத்து வயதுச் சிறுமி காணாமல் போயுள்ளதாக அவரின் ஒளிப்படத்துடன் பதிவிட்டனர். குறித்த சிறுமி அணிந்திருந்த உடையின் நிறம், அவர் தலைமுடியின் நிறம் மற்றும் கண்ணாடி குறித்த தகவல்களும்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ லண்டன் பகுதியின் கிழக்கே, எரிவாயுக் குழாய் மீது மின்னல் தாக்கியதன் காரணமாக, 60 வீடுகளில் இருந்தோர் வெளியேற்றப்பட்டதாக ஒன்ராறியோ மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியோ Tillsonburg பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த மின்னல் தாக்கம் சம்பவித்துள்ளது. இந்த மின்னல் தாக்கம் காரணமாக குறித்த அந்த எரிவாயு வினியோகக் குழாய் பலத்த சேதத்திற்கு உள்ளானதாகவும், பெருமளவான எரிவாயு அதிகலிருந்து வெளியேறியதாகவும், பல வீடுகள் மற்றும் நிலக்கீழ் கால்வாய்Read More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு மிசிசாகா பகுதியில் கார் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Aerowood Drive மற்றும் Dixie வீதிப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கறுப்பு நிற வாகனம் ஒன்றின் பின் புறத்தில் உந்துருளி ஒன்று மோதுண்டுள்ளதனை, சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நிழற்படங்கள் காட்டுகின்றன. இந்த விபத்தின் போது உந்துருளியில் இருந்த இரண்டு பேர் படுகாயமடைந்ததாகவும், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின்Read More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு ஸ்காபரோ Agincourt பகுதியில் வைத்து வாகனம் ஒன்றினால் மோதுண்ட சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிராபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Finch Avenue மற்றும் McCowan வீதிப் பகுதியில் நேற்று இரவு 11:10 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனத்தினால் மோதுண்ட குறித்த அந்த பாதசாரி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதனை ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவத்துடன்Read More →

Reading Time: < 1 minuteநேற்று பின்னிரவு வேளையில் பிரம்டன் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Dixie வீதி மற்றும் Advance Boulevard பகுதியில் நேற்று இரவு 11:45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை பீல் பிராந்தியக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சந்தேக நபர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஏதாவதுRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை, கரடியொன்று உடைத்துள்ளது. வன்கூவரிலுள்ள பெண்ணொருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதையடுத்து அவர் மனிதனொருவரால் உடைக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த காரின் உரிமையாளர், தன்னுடைய வீட்டு சூழலில் கரடி ஒன்று நடமாடியபோதிலும் அப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் சாதாரணமானது என்றபடியால் தான் ஆச்சரியப்படவில்லை என்றும், பின்னர் சி.சி.ரி.வி. கமெராக்களை சோதனையிட்ட போது, கரடியொன்று காரின் கண்ணாடியை உடைப்பதை கண்டுRead More →

Reading Time: < 1 minuteரொன்செஸ்வெலிஸில் பகல் நேரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய, குற்றவாளியை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த குற்றவாளி, 5’11 உயரம் கொண்ட ஒல்லிய தோற்றமுடைய ஆண் என விபரித்துள்ள பொலிஸார், அவர் வெள்ளை நிற எஸ்.யு.வி நிற வாகனத்தில் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர். எனவே, இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். ரொன்செஸ்வெலிஸ் அவெனியூ-Read More →