Reading Time: < 1 minuteகனடாவில் வீதிவிபத்தொன்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். வின்னிபெக் பொலிஸாரின் தகவலின் படி இந்த சம்பவம் கனடாவின் ஜாவிஸ் அவனியு மற்றும் மனபிலிப்ஸ் தெரு பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில், சின்க்ளேர் தெருவில் வெஸ்ட்பவுண்ட் ஜார்விஸ் மற்றும் லோகன் அவென்யூவில் வடபகுதி மெக்பிலிப்ஸ் வீதிகள் நேற்று வரை மூடப்பட்டிருந்தன. அத்துடன் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் வின்னிபெக் பொலிஸார் தீவிரRead More →

Reading Time: < 1 minuteதெற்கு ஒண்டாரியோவில் அமைந்துள்ள ரூச் தேசிய உள்ளக பூங்கா தொடர்பாக பொதுமக்கள் கற்றுக்கொள்ளும் நோக்கில், கல்வி மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்புக்கள், நேற்றையதினம், கனடிய சுற்றுச்சூழல் அமைச்சர் கத்தரின் மக்கன்னாவினால் வெளியிடப்பட்டுள்ளன. 80 சதுர கிலோமீற்றர்கள் வரை பரப்பளவை கொண்ட ரூச் தேசிய உள்ளக பூங்கா, பிரதானமாக ஸ்கார்புரோவில் அமைந்துள்ளதுடன், மார்க்கம், பிக்கரிங், Uxbridge ஆகிய பிரதேசங்களிலும் பாகங்களை கொண்டுள்ளது. ரூச் ஆற்றினை மையப்படுத்திய இப்பூங்காவிலுள்ளேயே டொரோண்டோRead More →

Reading Time: < 1 minuteவாகனத்தால் மோதுண்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு வேளையில் ஸ்காபரோவில் இடம்பெற்றுள்ளது. Kingston வீதி மற்றும் Morningside Avenue பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8:40 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வாகனத்தினால் மோதுண்ட பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாக தெரிவித்துள்ள ரொரன்ரோ காவல்துறையினர், சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteசுமார் ஒரு இலட்சம் டொலர்கள் பெறுமதியான பியர் மதுபாணத்தினை கொண்டிருந்த இணைப்புக் கொள்கல சரக்கு ஊர்தி ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களைக் கைது செய்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முழுமையாக பியர் மதுபாணம் நிரப்பப்பட்ட கொள்கலனுடனான குறித்த அந்தக் கனரக வாகனம் நேற்று திங்கட்கிழமை காலையில் Oxford County பகுதியில் இருந்து திருடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறைக்கு முறைப்பாடு செய்த அந்தக் கனரக வாகனத்தின் உரிமையாளர், தனதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய கடற்கரைப் பகுதிகளில் மட்டும் கைவிடப்பட்ட நிலையில் சுமார் 1,400 படகுகள் காணப்படுவதாக, அவ்வாறான படகுகளை மீட்டு அப்புறப்படுத்தும் குழுவினர் தெரிவித்துள்ளனர். படகுகள் அவ்வாறு கைவிடப்பட்டு அந்த இடங்களிலேயே இருந்து சூழலை மாசுபடுத்துவதை தவிர்க்கும் வகையில், படகுகளையும் அவற்றின் பாகங்களையும் மறு சுழற்சிக்கு உற்படுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறியும் முயற்சியில் மாகாண அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட, கைவிடப்பட்ட படகுகளை அப்புறப்படுத்தும் அமைப்பின் தலைவர் ஜோன்Read More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு பிரம்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நால்வரைத் தேடி வருவதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Glidden வீதி மற்றும் Rutherford வீதிப் பகுதியில் நேற்று இரவு 11:20 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது அங்கே ஆண் ஒருவர் காயங்களுடன் காணப்பட்டதாகவும், உயிராபத்தற்ற நிலையில் காணப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஏற்பட்டிருந்த காயம்Read More →

Reading Time: < 1 minuteசட்டவிரோத குழுக்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிப் பயன்பாடு என்பவற்றைக் கட்டுப்படுத்தி இல்லாமல் செய்யும் நடவடிக்கைக்காக 54 மில்லியன் டொலர்களை எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒன்ராறியோ மாகாணத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள மத்திய குற்றத் தடுப்பு அமைச்சர் பில் பிளையர், ஒன்ராறியோவில் மேற்கொண்டு வன்முறைகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்குடன் இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். துர்ரதிஸ்டவசமாக அண்மைய நாட்களில் நாடு முழுவதும், குறிப்பாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அண்மைக் காலங்களாக பெரும் சலசலப்பை ஏற்படுத்தி தொடர் கொலைச் சம்பவங்களின் சந்தேகநபர்களில் ஒருவரான பிரேயரின் (Bryer) தந்தை, தனது மகன் இறப்பதற்கு முன்பாக பதிவிட்ட காணொளியை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய ஆணொருவர், அவரது அமெரிக்கக் காதலி மற்றும் கனேடிய பேராசிரியர் ஒருவர் என மூன்று பேரை கொலை செய்ததாக இரண்டு இளைஞர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இந்தநிலையில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களாகிய Bryer Schmegelsky மற்றும் Kam McLeodRead More →

Reading Time: < 1 minuteவிண்வெளியில் இருந்து ஏலியன்கள் மர்மமான முறையில், பூமிக்கு சிக்னல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய விஞ்ஞானிகள் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளனர். குறித்த ஏலியன் சிக்னலை விஞ்ஞானிகள் எப்ஆர்பி என அழைக்கின்றனர். இந்த சிக்னலை ஏலியன்கள் தான் அனுப்பியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். விண்வெயில் இருந்து வந்த 8 ஏலியன் சிக்னல்கள் டெலிஸ்கோப் மையத்திற்கு கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எப்ஆர்பி கள் ரேடியோ அலைகளின் குறுகிய சிக்னல் கொண்டாதாகும். இவை ஒரேRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடும்பம் ஒன்றின் மீது இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பிரிட்டிஷ் கொலம்பியாவின் Richlea Square Shopping Centre பகுதியிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இரண்டு கார்கள் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டன. இதன்போது அதில் ஒரு கார் அங்குள்ள வெள்ளை நிற கடவையை தாண்டி நின்றுள்ளது. போக்குவரத்து விதிப்படி அதை கார் தாண்டக்கூடாது. இதையடுத்து மற்றுமொரு காரில் இருந்த எமி ஜூ என்றRead More →

Reading Time: < 1 minuteகடந்த வியாழக்கிழமை இரவு ஸ்காபரோவில் உள்ள வீடு ஒன்றின் பின் தரைப்பகுதியில் தளபாடங்கள் தீப்பற்றிக் கொண்டதில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பார்க் வீதி மற்றும் கெனடி வீதிப் பகுதியில், நேற்று இரவு பத்து மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. வீட்டின் பின்புறத்தில் உள்ள காணியில் சிறு தீமூட்டி அவர்கள் உட்கார்ந்திருந்த வேளையில், தளபாடங்களில் தீப்பற்றிக் கொண்டதாகவும், இதன்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க இரண்டுRead More →

Reading Time: < 1 minuteபெண்ணொருவருக்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த சந்தேக நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது சந்தேகநபர் தொடர்பான சி.சி.ரி.வி காணொளி பதிவொன்றினை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். குறித்த நபர், யோங் மற்றும் ஜெரார்ட் பகுதியில் 16 வயது சிறுமியொருவரை, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதே பகுதியில், அடுத்தடுத்த நாட்களில்Read More →

Reading Time: < 1 minuteஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வாங்ஷோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள சீனத் தூதரகம் இதனை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் “மெங் வாங்ஷோ சம்பவம் ஒரு நீதித்துறை வழக்கு மட்டுமல்லாது தேவையற்ற குற்றச்சாட்டுகளில் ஒரு முன்னணி சீன நிறுவனத்தை முடக்குவதற்கு அமெரிக்கா தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திய செயலாகும். இதுRead More →