Reading Time: < 1 minuteநேற்று பிற்பகல் ரொரன்ரோ Hillcrest Village குடியிருப்புப் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து ஆண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். St. Clair Avenue மற்றும் Rushton வீதியில் அமைந்துள்ள சென் மத்தியூஸ் யுனைட்டட் தேவாலயத்தில் நேற்று பிற்பகல் 3:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடற்ற ஒருவருக்கும் அங்குள்ள பணியாளர் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதன்போது அந்த வீடற்ற நபரை மற்றையவர் கத்தியால் குத்தியதாகவும், கத்திக்Read More →

Reading Time: < 1 minuteஇன்று அதிகாலை வேளையில் ஸ்காபரோ Golfdale Gardens குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Scarborough Golf Club வீதி மற்றும் Lawrence Avenue East பகுதியில், Confederation Driveவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நள்ளிரவுக்குச் சற்று பின்னராக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது காயமடைந்தவரை, அவருடன் அந்த வேளையில் இருந்த பிறிதொருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர். நோர்த் ஓபி லண்டன் ஸ்வர்ரா டவுன்ஷிப் பகுதியில் நேற்று(புதன்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இரண்டு கார்கள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இரண்டு வயது சிறுவன், ஆறு வயது சிறுவன், ஒன்பது வயது சிறுமி உள்ளிட்டவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. விபத்து குறித்து வழக்குRead More →

Reading Time: < 1 minuteகனேடிய விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். கனடாவின் யூகோனில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற விமான விபத்தில் இரண்டு கனேடியர்கள் உயிரிழந்திருந்தனர். இந்தநிலையில் குறித்த விபத்தில் 24 வயதான வைட்ஹார்ஸைச் சேர்ந்த ஷான் தோமஸ் கிச்சன் மற்றும் 33 வயதான வான்கூவரைச் சேர்ந்த ஜூலியா லேன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்கான் ஏர் விமானம் தனது பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில்Read More →

Reading Time: 2 minutesநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை அமைச்சினால் கனடா- ரொறன்ரோவில் பேர்ச்மவுண் (Birchmount stadium) விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி 4வது வருட தடகள விளையாட்டுப் போட்டி காலை 9 30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. கனடாத் தேசியக் கொடியினை திரு. K. சாந்திகுமார் அவர்கள் (கனடிய தேசிய அணியின் துடுப்பந்தாட்ட வீரர்) ஏற்றிவைக்க, அதனை தொடர்ந்து, தமிழீழ தேசியக் கொடியினைRead More →

Reading Time: < 1 minuteமத்திய ஒன்ராறியோ, முஸ்கோகா பகுதியில் நேற்று முன்தினம் நீர் மிதப்பு விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கனேடிய விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். Upper Raft Lake பகுதியில் கடந்த திங்கட்கிழமை முற்பகல் பத்து மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விமான விபத்து தொடர்பிலான தகவல் அறிந்ததும் இரண்டு தேடி மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அதேவேளை, மேலும்Read More →

Reading Time: < 1 minuteஅல்பேர்ட்டா சட்டமன்றில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில், மாநில முதல்வருக்கான சம்பளம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பளம் ஆகியன குறைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழு ஏகமனதாக நேற்று மேற்கொண்ட இந்த முடிவின் அடிப்படையில், தேர்தலில் வெற்றிபெற்று தேர்வான சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ஐந்து சதவீதத்தினாலும், முதல்வர் ஜேசன் கெனியின் சம்பளம் மேலும் ஐந்து வீதம் அதிகரித்து பத்து சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளது. கடந்த ஏப்ரல் மாத்தில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையைப்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ 24 மணிநேரத்தினுள் இரு மடங்காக பரவி, சுமார் 2.5 சதுரக்கிலோமீட்டர் பரப்பளவு வரையில் கொழுந்துவிட்டு எரிந்து வருவதாக அந்த மாநில காட்டுத்தீ முகாமைத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒலிவர் பிராந்தியத்தின் வடபகுதியில் கடந்த நான்காம் திகதி ஆரம்பித்த இந்த காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானங்கள், பாரிய உபகரணங்கள் சகிதம் நூற்றுக்கும் அதிகமானோர் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வெப்பத்துடன் கூடிய வானிலையுடன், சரிவான மலைப்பகுதியில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுற்றுலா பயணிகள் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ள பொலிஸார், இது மூவரின் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக அமையும் என கூறியுள்ளனர். கில்லாம் (Gillam) அருகே உள்ள நெல்சன் ஆற்றில் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அலுமினிய படகை அடுத்து, தேடுதலில் ஈடுபட்ட பொலிசார், தற்போது கொலை வழக்கிற்குRead More →

Reading Time: < 1 minuteகடற்படையில் பணிபுரிவோர் தாய்நாட்டுக்கு திரும்பும்போது அவர்களை துறைமுகத்திற்குச் சென்று வரவேற்பது அவர்களின் குடும்பங்களுக்கு என்றும் சளைக்காத விடயமாகும். அவ்வாறு கடற்படை பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய கடற்படை வீரர் ஒருவர் ’வரவேற்பு நிகழ்ச்சியில்’ தன்னை வரவேற்க வந்த காதலிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். HMCS Toronto என்னும் கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பல் ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தை சென்றடைந்த போது, ஆறு மாதங்களுக்குப் பின் திரும்பும் தங்கள் உறவினர்களைRead More →