Reading Time: < 1 minuteசட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவின் லண்டன் பகுதியில் வைத்து நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பயணித்த காரினை சோதனைக்கு உட்படுத்தியபோது போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே குறித்த காரில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகRead More →

Reading Time: < 1 minuteசர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் குழாய் பதிப்பு திட்ட விரிவாக்கத்திற்கு கனேடிய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு உற்பத்தியில் உலகளவில் கனடா ஐந்தாம் இடம் வகிக்கிறது. இந்த குழாய்பதிப்பு திட்டமானது, எட்மன்டன், அல்பேர்டா ஆகிய பகுதிகளிலிருந்து புர்னாபி, பிரிட்டிஷ் கொலம்பியா என பழங்குடி மக்கள் இருக்கும் பகுதி வரை மசகு எண்ணெயை கொண்டு செல்லும். தற்போது 1,150 கிமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழாய்பதிப்பு இரு மடங்குRead More →

Reading Time: < 1 minuteருவிற்றர் சமூக வலைத்தளத்தில் பதில்களை மறைக்கச் செய்யும் புதிய ஹைட் ரிப்ளைஸ் (hide replies) எனும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் கனடாவில் வழங்கப்பட்டுள்ளது. கனடாவை தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் இந்த அம்சம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறைக் கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய முடியும். எனினும் மறைக்கப்பட்ட பதில்களை புதிய ஐகனை கிளிக் செய்து பின்பற்றுபவர்கள் மட்டும் பார்க்க முடியும்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் லண்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று(வியாழக்கிழமை) காலை இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது 64 வயதான லறி ரெனோல்ட் மற்றும் 62 வயதான லின் வான்எவர் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, கனடாவில் அண்மைக்காலமாகவே இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.Read More →

Reading Time: < 1 minuteமூன்று வயதுக் குழந்தையை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, எட்மன்டன், பாடசாலை ஆசிரியர் ஒருவர் தன்னிடம் இசை பயில வரும் மூன்று வயதுக் குழந்தையை துஸ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பான தகவலை, பாடசாலை நிர்வாகம் பெற்றோருக்கு தெரியப்படுத்தியது. இதையடுத்து, குறித்த ஆசிரியர் மீது கடந்த மே 13, 2019 திகதி அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கமையRead More →

Reading Time: < 1 minuteகனேடியப் பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜுலை நினைவு தினத்தினை முன்னிட்டே இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுடரேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவு தினத்தினை முன்னிட்டு கனேடியப் பிரதமருக்குRead More →

Reading Time: 2 minutesபிக் பாஸ் போட்டியாளர்களில் மக்களின் மனம் கவர்ந்தவராக வலம் வரும் லாஸ்லியா திருமணமாகி, விவாகரத்தானவர் என அவரது நண்பர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவும் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே அவருக்கு ரசிகர்கள் உருவாகி விட்டனர். வீட்டில் எந்த சர்ச்சையிலும், சண்டையிலும்Read More →