கல்கரியில் ஃபெடரேட்டட் கூட்டுறவு லிமிடெட்டில் (எஃப்.சி.எல்) 200 இற்கும் மேற்பட்டோர், வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் கல்கரி கூட்டுறவு, உணவு விநியோகஸ்தர்களை மாற்ற தீர்மானித்துள்ளதால் இந்த மாற்றம் ஏற்படவுள்ளது.
ஃபெடரேட்டட் கூட்டுறவு லிமிடெட் (எஃப்.சி.எல்), எதிர்வரும் ஆண்டு மூடப்போவதாகக் அறிவித்துள்ளது. இதன் பின்னணியில் இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் வேலையை இழக்கவுள்ளனர்.
கால்கரி கூட்டுறவு தனது உணவை போட்டியாளரான சேவ்-ஆன்-ஃபுட்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற முயல்கின்றது.
இதுகுறித்து எஃப்.சி.எல் நிர்வாக துணைத் தலைவர் விக் ஹூவார்ட் கூறுகையில், ‘இந்த தீர்மானத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகின்றோம்.
ஏற்கனவே குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள ஒரு நகரத்தில், கல்கரி கூட்டுறவு முடிவு அதிக வேலைகள் இழக்கப்படுவதற்கும், அதிகமான குடும்பங்கள் சவால்களை எதிர்கொள்வதற்கும் வழிவகுத்தது.
ஒரு போட்டியாளருடன் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம், கல்கரி கூட்டுறவு எங்கள் ஊழியர்களை நேரடியாகவும் எதிர்மறையாகவும் பாதித்துள்ளது’என கூறினார்.