Reading Time: < 1 minute
நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கனடாவில் ஒரு பெரிய பசுமைக்குடில் பண்ணை, மூடப்பட்டுள்ளது.
வார இறுதியில் மூடப்பட்ட குறித்த பண்ணையில் கிட்டத்தட்ட 200பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
லீமிங்டனில் உள்ள நேச்சர் ஃப்ரெஷ் நிறுவனம், சுமார் 360 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 670 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.
விண்ட்சர் எசெக்ஸ் கவுண்டி சுகாதார பிரிவினால் குறித்த பண்ணை மூடப்பட்டுள்ளதாக விண்ட்சர் ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள பண்ணைகளில், குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் அதிக வைரஸ் தொற்றுகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.