20 மில்லியன் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி அளவைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில், கனடா கையெழுத்திட்டுள்ளது.
ஒட்டாவாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தி மாநாட்டின் போது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒஸ்ட்ராஜெனெகாவுடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இப்போது உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசி வாய்ப்பை அணுகுவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்தார்.
இத்துடன், தற்போது மத்திய அரசு ஆறு முன்னணி தடுப்பூசி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இப்போதே அறிவியலால் வழிநடத்தப்படுகிறோம்.
கொவிட்-19 தடுப்பூசி பணிக்குழு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பணிக்குழு இரண்டும் மிகவும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி விருப்பங்கள் மற்றும் உத்திகளை அடையாளம் காண உதவும் முக்கியமான பணிகளைச் செய்கின்றன’ என கூறினார்.