Reading Time: < 1 minute
நியூ பிரவுன்ஸ்வீக்கில் பாடசாலை பஸ் ஒன்றும் கார் ஒன்றும் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கார்லோ மற்றும் பிளக்பொயின்ட் ஆகியனவற்றுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நியூபிரவுன்ஸ்வீக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற போது பாடசாலை பஸ்ஸில் மாணவர்கள் பயணித்தனரா என்பது பற்றிய விபரங்களை பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.
விபத்து காரணமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் டுவிட்டர் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர்.