Reading Time: < 1 minute

17 ஈரானியர்களுக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலெய்ன் ஜோலி இந்த தடை விதிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

17 ஈரானிய பிரஜைகளுக்கும் மூன்று நிறுவனங்களுக்கும் எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உரிய முறையில் புர்கா அணியாத மாஷா அம்னி என்ற இஸ்லாமிய யுவதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக கனடா உள்ளிட்ட பல நாடுகள் ஈரானியர்களுக்கும் அந்நாட்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் செயற்பாடுகளை கனடா மறந்து விடவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜோலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கனேடிய வாழ் ஈரானிய புலம்பெயர் சமூகத்தை ஈரான் அரசாங்கம் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.