கனடாவின் கிழக்கு யொர்க்கில் 15 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் 13 வயது சிறுவன் மீது வழக்குப் பதிந்துள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த 13 வயது சிறுவன் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதால், நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் நேரடியாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
கடந்த புதன்கிழமை கேம்பிள் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ்த்தள பார்க்கிங் கேரேஜில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், 15 வயது மதிக்கத்தக்க ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடியபடி இருந்துள்ளதை கண்டுள்ளனர்.
அவருக்கு முதலுதவிக்கான ஏற்பாடுகள் செய்துவரும் நிலையில், குறித்த இளைஞர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மரணமடைந்தவர் Jordan Carter என அடையாளம் கண்டுள்ள பொலிசார், இந்த விவகாரம் தொடர்பில் 13 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
குற்றவாளி சிறுவன் என்பதால் அடையாளத்தை வெளியிட முடியாது என குறிப்பிட்டுள்ள பொலிசார், அவரை சிறார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.