Reading Time: < 1 minute

கனடாவில் மான்கள் இல்லாத பகுதி ஒன்றிற்கு நீந்தியே வந்துள்ளது ஒரு மான்.

ஆனால், சாலை விபத்தில் அந்த மான் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் New Brunswickஐயும் இணைக்கும் confederation பாலத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற செனேட்டரான Diane Griffin என்ற பெண்மணிக்கு மொபைல் அழைப்பு வரவே, காரை ஓரங்கட்டியிருக்கிறார்.

அப்போது ஆச்சரியக் காட்சி ஒன்று அவர் கண்ணில் பட்டுள்ளது. ஆம், பெரிய வெள்ளை வால் மான் ஒன்று அங்கு சாலையோரமாக இருந்த புல்லை மேய்ந்துகொண்டிருந்திருக்கிறது.

ஆச்சரியம் என்னெவென்றால், பிரின்ஸ் எட்வர்ட் தீவில் மான்களே கிடையாது.

அப்படியானால், அந்த மான் New Brunswickஇலிருந்து அல்லது Nova Scotiaவிலிருந்து நீந்தியே பிரின்ஸ் எட்வர்ட் தீவை வந்தடைந்திருக்கவேண்டும் என எண்ணி Diane ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கும்போதே அந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திடீரென அந்த மான் சாலைக்கு மறுபுறத்திற்குத் தாவியோட, வேகமாக வந்த ட்ரக் ஒன்று அதன் மீது மோத, அந்த இடத்திலேயே பலியாகிவிட்டிருக்கிறது அந்த மான்.

அதிர்ச்சியில் உறைந்துபோன Diane போகும் வழியெல்லாம், சாலையில் ஏதாவது விலங்குகள் நிற்கின்றனவா என பார்த்துக்கொண்டே சென்றாராம்.