Reading Time: < 1 minute

ரொறன்ரோ போக்குவரத்து ஆணையம், எதிர்வரும் வாரங்களில் தனது 1,200 ஊழியர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.

பயணத்தின் சரிவு மற்றும் மாத வருமானத்தில் 90 மில்லியன் டொலர் இழப்பு காரணமாக, ரொறன்ரோ போக்குவரத்து ஆணையம், இந்த முடிவினை எடுத்துள்ளது.

அமல்கமடேட் டிரான்சிட் யூனியன் லோக்கல் 113 உடனான பேச்சுவார்த்தைக்கு உட்பட்டு, சேவைத் தேவைக்கு ஏற்ப சேவைத் திறனை ஈடுகட்ட 1,000 போக்குவரத்து இயக்குபவர்களைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யவுள்ளதாகவும் போக்குவரத்து ஆணையம், தெரிவித்துள்ளது.

மேலும், பணிநீக்கங்கள் 200 தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இல்லாத ஊழியர்களையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல், ரொறன்ரோ போக்குவரத்து ஆணையம் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இல்லாத ஊழியர்களுக்கு சம்பள முடக்கம் அறிமுகப்படுத்தப்படும். அமைப்பு முழுவதும் கூடுதல் நேர பயன்பாட்டைக் குறைக்கும். பருவகால வேலைக்கு எடுத்தலைக் கைவிடுவதோடு, அனைத்து அத்தியாவசியமற்ற மூலதனத் திட்டங்களையும் தாமதப்படுத்தும் என்றும் போக்குவரத்து ஆணையம், கூறியுள்ளது.

ஒரு முறை முழுமையாக செயற்படுத்தப்பட்டால், தற்காலிக பணிநீக்கங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் ஒரு மாதத்திற்கு சுமார் 25 மில்லியன் டொலர்களை மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.