Reading Time: < 1 minute
12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Health கனடா அனுமதி வழங்கியுள்ளது.
Pfizer தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவது பாதுகாப்பானது என Health கனடா கூறுகிறது. ஆரம்பத்தில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த மத்திய சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியிருந்தது.
புதன்கிழமை வெளியான அறிவித்தல் மூலம் இளைய வயதினருக்கு இந்த தடுப்பூசியை வழங்க அனுமதித்த உலகின் முதல் நாடு கனடாவாகும்.